விஜய் ஆண்டனி நடிக்கும் ‘கொலைகாரன்’ திரைப்படம்..!

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘கொலைகாரன்’ திரைப்படம்..!

‘காளி’ படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனி அடுத்த படங்களில் பரபரப்பாக நடிக்கத் துவங்கிவிட்டார்.

இப்போது தியா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.பிரதீப் தயாரிக்கும் புதிய படமான ‘கொலைகாரன்’ படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிருக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் ஆக்சன் கிங் அர்ஜூன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். நாயகியாக விஜய் ஆண்டனியின் வழக்கப்படியே ஒரு புதுமுகம் அறிமுகமாகிறார். ஆஷிமா நார்வால் என்ற அறிமுக நாயகியை இந்தப் படத்தின் மூலமாக அறிமுகப்படுத்துகிறார் விஜய் ஆண்டனி.

மேலும், நாசர், சீதா, வி.டி.வி கணேஷ் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர்.

அறிமுக இயக்குநரான ஆண்ட்ரூ லூயிஸ் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

ஒளிப்பதிவு – மியூக்ஸ், கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார், படத் தொகுப்பு – ரிச்சர்டு கெவின், நடனம் – பிருந்தா, உடை வடிவமைப்பு – ஹினா, புகைப்படங்கள் ஆர்.எஸ்.ராஜா, மக்கள் தொடர்பு – நிகில், ஒலி வடிவமைப்பு – கே.சக்திவேல், விளம்பர வடிவமைப்பு – ஓ.கே.விஜய், டிசைன்ஸ் – Gibsonuga, VFX – Hues Media Design, நிர்வாகத் தயாரிப்பு – ஜி.ஏ.ஹரிகிருஷ்ணன், தயாரிப்பு நிர்வாகம் – ஆர்.ஜனநாதன், இணை தயாரிப்பு – சாண்ட்ரா ஜான்சன், சுந்தர காமராஜ்.  

இத்திரைப்படத்தின் பூஜை நிகழ்வு நேற்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் மூடர் கூடம் நவீன், இயக்குநர்கள் புஷ்கர், காயத்ரி, நடிகர் அர்ஜூன், நடிகை ஆஷிமா நார்மல், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் மற்றும் திரைப்படத்தில் பங்கு பெறும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.