பிப்ரவரி 28 – கோச்சடையான் ஆடியோ ரிலீஸ்..?

பிப்ரவரி 28 – கோச்சடையான் ஆடியோ ரிலீஸ்..?

கோச்சடையான் படத்தின் பாடல்கள்  வெளியீட்டு விழா வரும் பிப்ரவரி 28, வெள்ளிக்கிழமையன்று நடைபெறலாம் என தெரிகிறது..!

ஏற்கெனவே சென்ற ஆண்டு நவம்பர், டிசம்பர், இந்தாண்டு ஜனவரி ஆகிய மாதங்களிலேயே இசை மற்றும் வெளியீட்டு விழா என்று அறிவித்தும் கடைசி நிமிடங்களில் அது ஒத்திப் போடப்படுவதாக அறிவிக்கப்பட்டது..

இப்போது ஏப்ரல் 11 படம் ரிலீஸ் என்பது உறுதியான நிலையில் அதற்கு முன்பாக ஒரு மாதமாவது இடைவெளி இருந்தால்தான் பிரமோஷனை நாடு முழுவதும் நடத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் அந்த நாளை தேர்வு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன..!

இதுவும் தள்ளிப் போகுமா..? அல்லது திட்டமிட்டப்படி நடக்குமா என்பது அந்த கோச்சடையானுக்கே வெளிச்சம்..!

Our Score