full screen background image

கோச்சடையான் விழா கோலாகலமாக நடந்தது..!

கோச்சடையான் விழா கோலாகலமாக நடந்தது..!

சூப்பர்ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகக் கோலாகமாக இன்று காலை நடந்து முடிந்தது.

posters-1

சிறப்பு விருந்தினராக ஷாரூக்கான் கலந்து கொண்டார். விழாவிற்கு பல முக்கிய சினிமா பிரபலங்களும் வந்திருந்தனர். இயக்குநர் சிகரம்.கே.பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், ஏவி.எம்.சரவணன், இயக்குநர் ஷங்கர், கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், படத்தில் நடித்திருந்த ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், மற்றும் ஹீரோயின் தீபிகா படுகோனே, தமிழ் நடிகர்கள் தனுஷ், பிரபு, விஜயகுமார், ஆதி,  ஷோபனா, நாசர், படத் தயாரிப்பாளர் தாணு  மற்றும் பல முக்கிய புிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி நடந்த சத்யம் தியேட்டரைச் சுற்றிலும் காலையில் இருந்தே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போக்குவரத்து மாற்றிவிடப்பட்டிருந்தது. தனியார் செக்யூரிட்டியைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்புக்காக வந்திருக்க.. அப்படியிருந்தும் பிரபலங்கள் பலரும் தியேட்டருக்குள்ளே செல்வதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியதாயிருந்தது.

தியேட்டரைச் சுற்றிலும் ரஜினி ரசிகர் மன்றத்தினர் கோச்சடையான் ஸ்பெஷல் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். வழக்கம்போல கட்அவுட்டுக்கு பால் அபிஷேகமும் செய்யப்பட்டது.

kochadaiyaan-audio-24

ரஜினிக்கும் முன்பாகவே அரங்கத்திற்குள் வந்துவிட்ட லதா ரஜினி, விருந்தினர்கள் அனைவரையும் அவர்கள் சீட் அருகேயே சென்று கை குலுக்கி வரவேற்றார். முன் வரிசையில் முக்கிய விருந்தினர்களுடன் ரஜினியின் குடும்பத்தினரும் அமர்ந்திருந்தனர்.

kochadaiyaan-audio-8

சத்யம் தியேட்டரின் பின்புறம் இப்போது புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்டிடத்தின் 3 மாடிகளிலும் ரசிகர்கள் ஏறி நின்று கொண்டு வந்த பிரபலங்களை பார்த்து உற்சாகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். ரஜினி காரில் வந்து இறங்கியபோது அந்தப் பகுதியே கலங்கியது போன்ற கைதட்டல் எழுந்தது.

kochadaiyaan-audio-18

ரஜினி ரசிகர்கள் கூட்டத்தினர் தியேட்டரின் மாடியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ரஜினி பெயரைச் சொல்லும்போதெல்லாம் அவர்கள் எழுப்பிய குரலும், கைதட்டலும், விசிலும்தான் விழாவை அதகளப்படுத்தியது.

kochadaiyaan-audio-5

பத்திரிகையாளர்கள் அனைவரும் முதல் 3 வரிசைகளில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அப்படியும் இடம் கிடைக்காதவர்களுக்கு சீஸன்ஸ் தியேட்டரில் சீட் கொடுக்கப்பட்டு அவர்களுக்காக அங்கே சத்யம் தியேட்டரில் நடப்பது லைவ் ரிலே செய்யப்பட்டது.

விழாவின் துவக்கத்தில் கோச்சடையான் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு நடனக்குழுவினர் ஆடினர்.. பின்பு கோச்சடையான் படத்தின் டிரெயிலர் தமிழ், இந்தி இரு மொழிகளிலும் திரையிடப்பட்டது.  முப்பரிமாண காட்சிகளைக் காண்பதற்காக ஸ்பெஷல் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.

kochadaiyaan-audio-01

டிரெயிலரில் கோச்சடையானாக வரும் ரஜினி பேசும் பன்ச் டயலாக் பளிச்சென்று கேட்டது.. “சந்தர்ப்பம் தானா வராது.. நாமதான் உருவாக்கிக்கணும்..” என்ற டயலாக் பெரும் கைதட்டலைப் பெற்றது. அதேபோல் டிரெயிலரின் இறுதியில் “எப்படி இருக்கு நம்ம ரதகஜ படைகளெல்லாம்..?” என்று ரஜினி தேரில் ஏறி நின்ற நிலையில் கேட்பதும் அசத்தல் ரகம்.

இதன் பின்பு  மேக்கிங் வீடியோஸ் காண்பிக்கப்பட்டது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது கேப்ஸரிங் மோஷன் டைப்புக்காக உடல் முழுவதும் வயர்களை மாட்டிக் கொண்டு கேமிராக்களை ஆங்காங்கே உடலுக்கு நெருக்கமாக வைத்துக் கொண்டு நடித்தது எல்லாம் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தது. ஒரேயொரு இடறல்.. கே.எஸ்.ரவிக்குமாரை தவிர மற்ற அனைவருமே இதில் ஆங்கிலத்தில் பேசியிருப்பதுதா்ன்.

விழாவில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளின் ஆடியோக்களும் வெளியிடப்பட்டன. கார்பன் செல் நிறுவனத்தின் கோச்சடையான் ஸ்பெஷல் செல்போனை ரஜினியே வெளியிட்டார். அதேபோல் கோச்சடையானை மையப்படுத்திய குழந்தைகளுக்கான வீடியோ கேம்ஸையும் ரஜினியே வெளியிட்டார்.

cellphone

இதன் பின்பு படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி வரவேற்புரையாற்றினார். தமிழும், ஆங்கிலமுமாக கலந்து பேசிய அவரது பேச்சு மிக டச்சிங்காகவே இருந்தது.. பேச்சின் இறுதியில் பலருக்கும் நன்றி தெரிவித்தவர் ரஜினிக்கு நன்றி தெரிவித்து பேசியபோது நிசமாகவே ரஜினி கண் கலங்கிவிட்டார்.

kochadaiyaan-audio-2

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.பி.முத்துராமன்,  ஷங்கர், கவிப்பேரரசு வைரமுத்து, தயாரிப்பாளர்கள் முரளி மனோகர், சுனில் லல்லூ, ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், நடிகர் சரத்குமார், ஏ.ஆர்.ரஹ்மான், ஹீரோயின் தீபிகா படுகோனே, ஷாரூக்கான், சூப்பர் ஸ்டார் ரஜனி ஆகியோர் வரிசையாக பேசினார்கள்.

kochadaiyaan-audio-26

விழா முடிந்த பின்பும் ரசிகர்கள் கூட்டம் காத்திருந்து ரஜினி வெளியில் வந்து கை காட்டிச் சென்ற பின்பே கலைந்தது..! அந்தச் சாலையில் மீண்டும் போக்குவரத்து சகஜ நிலைமைக்கு வருவதற்கே 3 மணி நேரத்திற்கும் மேலானது..!

kochadaiyaan-audio-22

எத்தனையாண்டுகள்தான் ஆனாலும் இந்த சூப்பர் ஸ்டார் ரஜினி மாஸை அடித்துக் கொள்ள, வேறொரு ஹீரோ வர முடியாது என்றே தோன்றுகிறது..!

புகைப்படங்கள் உதவிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகர்கள் அமைப்பிற்கு எங்களது நன்றி..!

Our Score