‘காவியத் தலைவன்’ படத்தின் ஸ்பெஷல்ஸ் இவைகள்தான் :
Y Not Studios and Radiance Media இணைந்து தயாரிக்கும் ‘காவியத் தலைவன்’ படத்தை வசந்தபாலன் இயக்க, ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
எப்போதும் இல்லாததுபோல இந்த ‘காவியத் தலைவன்’ படத்தில் மொத்தம் 14 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
கவிஞர் வாலி எழுதிய ‘அல்லி அர்ஜுனா’ நாடகத்தில் இருந்த 6 காட்சிகள் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன. அவை அனைத்தையும் பாடலாக மாற்றிக் கொடுத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.
‘வாங்க மக்கா வாங்க…’ என்ற பாடல் நா.முத்துக்குமார் எழுதியது. வசந்தபாலனின் முந்தைய படங்களில் இவர்கள் இருவரும் இணைந்த பாடல்கள் பெரும் வெற்றி அடைந்தன. இந்தப் பாடல் அன்றைய நாடக வாழ்க்கையின் பெருமையைச் சொல்லும் பாடலாகவும் அமைந்துள்ளது.
இப்படத்தில் பா.விஜய் மொத்தம் நான்கு பாடல்களை எழுதியுள்ளார், அதில் இரண்டு காதல் பாடல்கள். ‘ஏய் மிஸ்டர் மைனர்’ மற்றும் ‘யாருமில்லா தனியறையில்’ பாடல்கள் இனிமையான மெலடி பாடல்களாக அமைந்துள்ளன.
‘யாருமில்லா தனியறையில்’ என்ற பாடல் வெளியாகிய சில மணி நேரங்களில் ‘ஐ டியூன்ஸ்’-ல் உலக அளவில் முதல் பத்து இடங்களில் ஒன்றாக இடம் பிடித்தது.
‘சொல்லி விடு..சொல்லி விடு’ என்ற பாடல் போரின் கொடுமைகளையும், உலக அமைதியைச் சொல்லும் பாடலாகவும் அமைந்துள்ளது
ஏ.ஆர்.ரகுமான் இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களிலும் பழமையான இசைக் கருவிகளை மட்டுமே வைத்து இசை அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம்.
அருணகிரி நாதர் இயற்றிய ‘திருப்புகழ்’ பாடலில் இருந்தும் ஒரு பாடல் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளது.
‘ஏய்… சண்டி குதிரை…’ என்ற பாடல் மிகத் துள்ளலான பாடலாகவும், அனைத்து சிறுவர்களும் ரசிக்கும்படியாகவும் படமாக்கப்பட்டுள்ளது.
அமரர் ரகுராம், சிவசங்கர், ராஜூ சுந்தரம், சின்னி பிரகாஷ் போன்ற அனுபவம் மிகுந்த நடன ஆசிரியர்கள் மற்றும் ஷோபி, பாபி போன்ற இளம் நடன இயக்குனர்களும் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்.
இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் முழுவதும் காரைக்குடி, தென்காசி, சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான், கவிஞர் வாலியுடனான அன்பின் காரணமாக இந்தப் படத்தின் பாடல்களை அவருக்கு சமர்ப்பித்துள்ளார். இப்படம் வாலி அவர்கள் கடைசியாகப் பணியாற்றிய படமாகும்.
இப்படத்தில் இருக்கும் ஏழு பாடல்களையும் ஹரிச்சரணே பாடியுள்ளார். சமீப காலத்தில் ஒரு படத்தில் ஒரே பாடகர் இத்தனை அதிகமான பாடல்களைப் பாடியிருப்பது இதுவே முதல் முறை.
முதலில் பாடல்கள் எழுதப்பட்டு அதன் பிறகே மெட்டு அமைக்கப்பட்டுள்ளது. கதையின் ஓட்டத்தோடு இணைந்த பாடல்கள் என்பதால் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மிகுந்த சிரத்தையோடு இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இசையை மட்டுமே மையப்படுத்திய ஒரு படம் ‘காவியத் தலைவன்’ என்று உண்மையாகவே சொல்லலாம்.