full screen background image

திரையுலக சாதனையாளர் பஞ்சு அருணாச்சலம் மறைந்தார்

திரையுலக சாதனையாளர் பஞ்சு அருணாச்சலம் மறைந்தார்

பிரபல தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், பாடலாசிரியரும், கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75.

காரைக்குடி அருகில் இருக்கும் சிறுகூடல்பட்டி என்ற ஊரில் பிறந்தவர் பஞ்சு அருணச்சாலம். கவியரசு கண்ணதாசனின் அண்ணன் மகனான இவர் சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்ப காலத்தில் கண்ணதாசனிடமே உதவியாளராகப் பணியாற்றினார்.

panchu arunachalam-1

1960-ம் ஆண்டு ‘தெய்வப் பிறவி’ படத்தில் ‘என்னதான் மனிதன்’ என்ற பாடலை எழுதினார். இதுதான் இவர் எழுதிய முதல் சினிமா பாடல்.

1962-ல் வெளியான ‘சாரதா’ படத்தில் இவர் எழுதிய ‘மணமகளே மருமகளே வா வா’ என்ற பாடல் இன்றைக்கும் கிராமப் புறங்களில் ஒவ்வொரு திருமண வீடுகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

1965-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான ‘கலங்கரை விளக்கம்’ படத்தின் புகழ் பெற்ற பாடலான ‘பொன்னெழில் பூத்தது புது வானில்’ என்ற பாடலை எழுதியதும் இவர்தான்.

தனித்து பாடல்கள் எழுதிய பின்பும் கவியரசு கண்ணதாசனிடம் உதவியாளராகவே இருந்து வந்தார்.

1974-ஆம் ஆண்டு ‘எங்கம்மா சபதம்’ என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக மாறினார். அதைத் தொடர்ந்து ‘மயங்குகிறாள் ஒரு மாது’, ‘அவன்தான் மனிதன்’, ‘துணிவே துணை’ உள்ளிட்ட படங்களுக்கு தொடர்ந்து வசனகர்த்தாவாக பணியாற்றினார்.

‘அன்னக்கிளி’ படத்தை தயாரித்தபோது அப்படத்தின் மூலமாக இசைஞானி இளையராஜாவை தமிழ்ச் சினிமாவுலகத்திற்கு அறிமுகப்படுத்தியது பஞ்சு அருணாச்சலம்தான்.

மேலும், தனது மனைவியின் பெயரில் ‘காயத்ரி’ படத்தைத் தயாரித்தார். இதில் ரஜினியும் ஸ்ரீதேவியும் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் ‘பிரியா’ படத்தை பி.ஏ. புரொடக்ஷடன் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்தார்.

ilayaraja-vaali-panchu arunachalam-1

தொடர்ந்து  ‘ஆறிலிருந்து அறுபதுவரை’(1979), ‘கல்யாணராமன்’ (1979), ‘எங்கேயோ கேட்ட குரல்’ (1982), ‘ஆனந்த ராகம்’ (1982), ‘ஜப்பானில் கல்யாணராமன்’ (1985), ‘குரு சிஷ்யன்’ (1988), ‘மைக்கேல் மதனகாமராஜன்’ (1991), ‘ராசுக்குட்டி’ (1992), ‘தம்பி பொண்டாட்டி’ (1992), ‘வீரா’ (1994), ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ (1999), ‘ரிஷி’ (2001), ‘சொல்ல மறந்த கதை’ (2002), ‘மாயக் கண்ணாடி’ (2007), ‘காதல் சாம்ராஜ்ஜியம்’ (வெளிவரவில்லை) ஆகிய படங்களை தயாரித்தார்.

மேலும், ‘பாண்டியன்’, ‘தர்மதுரை’, ‘ராஜாதி ராஜா’, ‘குருசிஷ்யன்’, ‘பாயும்புலி’, ‘போக்கிரி ராஜா’, ‘முரட்டுக்காளை’ உள்ளிட்ட ரஜினியின் புகழ் பெற்ற பல படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார் பஞ்சு அருணாச்சலம்.

panchu arunachalam

1974-ம் ஆண்டு ‘எங்கம்மா சபதம்’ என்கிற படத்தின் மூலம் கதாசிரியராக அறிமுகமானார் பஞ்சு அருணாச்சலம். தொடர்ந்து ‘மயங்குகிறாள் ஒரு மாது’ (1975), ‘அவன்தான் மனிதன்’ (1975), ‘துணிவே துணை’ (1976), ‘அன்னிக்கிளி’ (1976), ‘கவிக்குயில்’ (1976), ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்’ (1978), ‘ப்ரியா’ (1978), ‘காற்றினிலே வரும் கீதம்’ (1978), ‘வெற்றிக்கு ஒருவன்’ (1979), ‘கல்யாணராமன்’ (1979), ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ (1979), ‘நிறம் மாறாத பூக்கள்’ (1979), ‘உல்லாசப் பறவைகள்’ (1980), ‘முரட்டுக் காளை’ (1980), ‘கடல்மீன்கள்’ (1981), ‘மீண்டும் கோகிலா’ (1981), ‘எல்லாம் இன்பமயம்’ (1981), ‘கழுகு’ (1981), ‘கவரிமான்’ (1981), ‘மகனே மகனே’ (1982), ‘சகலகலாவல்லவன்’ (1982), ‘எங்கேயோ கேட்ட குரல்’ (1982), ‘போக்கிரி ராஜா’ (1982), ‘அடுத்த வாரிசு’ (1983), ‘தூங்காதே தம்பி தூங்காதே’ (1983), ‘மண்வாசனை’ (1983), ‘பாயும் புலி’ (1983), ‘தம்பிக்கு எந்த ஊரு’ (1984), ‘குவா குவா வாத்துகள்’ (1984), ‘வாழ்க்கை’ (1984), ‘உயர்ந்த உள்ளம்’ (1985), ‘புதிய தீர்ப்பு’ (1985), ‘ஜப்பானில் கல்யாணராமன்’ (1995), ‘நீதானா அந்தக் குயில்’ (1986), ‘தர்மத்தின் தலைவன்’ (1988), ‘மணமகளே வா’ (1988), ‘குரு சிஷ்யன்’ (1988), ‘தர்மத்தின் தலைவன்’ (1988), ‘மனிதன்’ (1988), ‘என் ஜீவன் பாடுது’ (1988), ‘அபூர்வ சகோதரர்கள்’ (1989), ‘ராஜா சின்ன ரோஜா’ (1989), ‘அதிசயப் பிறவி’ (1990), ‘எங்கிட்ட மோதாதே’ (1990), ‘புதுப்பாட்டு’ (1990), ‘சிங்காரவேலன்’ (1992), ‘தம்பி பொண்டாட்டி’ (1992), ‘பாண்டியன்’ (1992), ‘வனஜா கிரிஜா’ (1994), ‘வீரா’ (1994), ’மாயா பஜார்-1995’ (1995), ‘தொட்டில் குழந்தை’ (1995), ‘அலெக்ஸாண்டர்’ (1996), ‘ரிஷி’ (2001) ஆகிய படங்களின் கதாசிரியாகவும் பணியாற்றிய அனுபவஸ்தர்.

1977-ஆம் ஆண்டு ‘என்ன தவம் செய்தேன்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், ‘இளைய தலைமுறை’(1977), ‘என்ன தவம் செய்தேன்’(1977), ‘சொன்னதை செய்வேன்’(1977), ‘நாடகமே உலகம்’(1979), ‘மணமகளே வா’(1988), ‘புதுப்பாட்டு’(1990), ‘கலிகாலம்’(1992), ‘தம்பி பொண்டாட்டி’(1992) ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

கவிஞர் பஞ்சு அருணாச்சலம் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியிருக்கிறார்.

panchu arunachalam-2

1960 – தெய்வ பிறவி, 1963- ஆசை அலைகள், 1965- கலங்கரை விளக்கம், 1975- மயங்குகிறாள் ஒரு மாது, 1976- அன்னக்கிளி, 1977- புவனா ஒரு கேள்விக்குறி, 1977- காயத்ரி, 1977- ஆடு புலியாட்டம், 1978- முள்ளும் மலரும், 1978- வட்டத்துக்குள் சதுரம், 1978- பிரியா, 1979- கௌரிமான், 1979- வெற்றிக்கு ஒருவன், 1979- ஆறிலிருந்து அறுபதுவரை, 1979- கவிக்குயில், 1979- பூந்தளிர், 1980- குரு.1980- உல்லாசப் பறவைகள், 1980- முரட்டுக்காளை, 1980- நெஞ்சத்தைக் கிள்ளாதே, 1980- அன்புக்கு நான் அடிமை, 1981- அலைகள் ஓய்வதில்லை, 1981- கர்ஜனை, 1981- கழுகு, 1981- சங்கர்லால், 1981- எல்லாம் இன்பமயம், 1981- கடல்மீன்கள், 1981- மீண்டும் கோகிலா, 1982- கோபுரங்கள் சாய்வதில்லை, 1982- ராணி தேனி, 1982- எங்கேயோ கேட்ட குரல், 1983- கோழி கூவுது, 1983- ஆனந்தக்கும்மி, 1983- அடுத்த வாரிசு, 1983- மண்வாசனை, 1984- அம்பிகை நேரில் வந்தாள், 1984- தம்பிக்கு எந்த ஊரு, 1984- வைதேகி காத்திருந்தாள், 1984- வாழ்க்கை, 1985- புதிய தீர்ப்பு, 1985- மனக்கணக்கு, 1986- நீதானா அந்தக் குயில், 1987- உள்ளம் கவர்ந்த கள்வன், 1988- மணமகளே வா, 1988- தர்மத்தின் தலைவன், 1989- மாப்பிள்ளை, 1990-புதுப்பாட்டு, 1991- தர்மதுரை, 1993- சின்ன கண்ணம்மா, 1994- வியட்நாம் காலனி, 1995- மாயா பஜார் 1995,  2001- ரிஷி ஆகிய படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதிய கவிஞர் இவர்.

சாதனையாளர் பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்..!

Our Score