full screen background image

கவிஞர் மனுஷ்யபுத்திரன் நடிகராக அறிமுகமாகும் ‘பத்து தல’ திரைப்படம்..!

கவிஞர் மனுஷ்யபுத்திரன் நடிகராக அறிமுகமாகும் ‘பத்து தல’ திரைப்படம்..!

எஸ்.டி.ஆர்., கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் தலைப்பு  அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ க்ரீன் ஃபிலிம் (Studio Green Films ) நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரிக்கிறார்.

இந்தப் பத்து தல’ படத்தினை ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரான ஓபிலி. N.கிருஷ்ணா இயக்குகிறார்.

வரும் கோடை காலத்தில் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், படத்தில் இணைந்து வரும் நடிகர் பட்டாளம்,  படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிறச் செய்கிறது.

சமீபத்தில்  நடிகை ப்ரியா பவானி சங்கர் படத்தில் நாயகியாக இணைந்த நிலையில் தற்போது தமிழகத்தின் இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான, கவிஞர் மனுஷ்யபுத்திரன் மற்றும் பாடகர் அசுரன்’ படப் புகழ் டிஜே இருவரும் இப்படத்தின் நடிகர் குழுவில் இணைந்துள்ளனர்.

இது குறித்து இயக்குநர் ஓபிலி N.கிருஷ்ணா பேசும்போது, “தமிழகத்தின் இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான கவிஞர் மனுஷ்யபுத்திரன் மற்றும்  பாடகர் டி.ஜே., அவர்களை எங்கள் படத்திற்கு வரவேற்பதில் மகிழ்சியடைகிறோம்.

மனுஷ்யபுத்திரன் அவர்களின் கவித் திறமையும், இலக்கிய திறமையும் பிரசித்தி பெற்றது. இப்படத்தில் சமூக சேவகர் உதயமூர்த்தி எனும் கதாப்பாத்திரத்தில் அவர் நடிக்கிறார். நிறைய நேர்மறைதன்மை கொண்ட, படத்தின் கதையில் அழுத்தம் தரும்  மிகவும் முக்கியமான கதாப்பாத்திரம் அது.

டி.ஜே., அவர்களின் புகழும் ‘அசுரன்’ போன்ற படத்தில் அவர் காட்டிய நடிப்பு திறமையும் அனைவரும் அறிந்ததே. மிக அழுத்தமான நெகட்டிவ் தன்மை கொண்ட பாத்திரத்தை அப்படத்தில் அவர் செய்திருந்தார். இப்படத்திற்கான கதாப்பாத்திரத்திற்காக நாங்கள் அவரை அணுகிய போது அவர் லண்டனில் இருந்தார். எங்கள் முழு உரையாடலும் zoom calls-ல்தான் நடந்தது. 

அவருக்கு லுக் டெஸ்ட் எடுப்பது என்பது இயலாது என்றே நாங்கள் நினைத்தோம். ஆனால், அவரே பிரத்யேகமாக படத்தின் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை தயார் செய்து கொண்டு லண்டனில் இருந்து கொண்டே லுக் டெஸ்ட் செய்தார். அவரது லுக் டெஸ்ட் புகைப்படம் மிக அட்டகாசமாக கதாப்பாத்திரத்துடன் பொருந்தியிருந்தது. அதனை படத்தின் விளம்பரங்களுக்கான போஸ்டரில் பயன்படுத்தவுள்ளோம்.

இப்படத்தின் மிகச் சிறந்த திறமையாளர்களுடன், பணிபுரியும் மிகச் சிறந்த அனுபவத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்…” என்கிறார்.

Our Score