மருத்துவர் மூவிஸ் சார்பில் திருச்செங்கோடு T.K.ராஜா தயாரிக்கும் புதிய படம் ‘கவலைப்படாத காதலர் சங்கம்’.
புதுமுகங்கள் கௌஷிக் மற்றும் ஹரி நாயகர்களாகவும் சுப்ரஜா நாயகியாகவும் நடிக்கிறார்கள். மேலும் படத்தில் கஞ்சா கருப்பு, அப்பு குட்டி, இமான் அண்ணாச்சி, அம்பானி சங்கர், தீப்பெட்டி கணேசன் மற்றும் ஷர்மிலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு : இரதன் சந்தாவத், இசை : சௌந்தர்யன், பாடல்கள் : யுகபாரதி, இளைய கம்பன் மற்றும் ஜெயங்கொண்டான்.
‘வேடப்பன்’, ‘ஒரு சந்திப்பில்’, ‘சோக்கு சுந்தரம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்நர் ஆனைவாரி அ. ஸ்ரீதர் இந்தப் படத்தை இயக்குகிறார்.
ஒரு தலை காதலால் ஏற்படும் பிரச்சனைகள்தான் படத்தின் கதைக் கருவாம்.
தமிழ் சினிமாவில் முதன் முறையாக F-65 எனும் கேமராவை பயன்படுத்தி படமாக்குகிறார்கள்.
வரும் மார்ச் 13 முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செங்கோட்டில் தொடங்குகிறது.
இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.