full screen background image

இந்திராகாந்தி கொலையாளிகள் பற்றிய படத்திற்கு தடை..!

இந்திராகாந்தி கொலையாளிகள் பற்றிய படத்திற்கு தடை..!

இந்திய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கொலை பற்றி பஞ்சாபி மொழியில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தை மத்திய சென்சார் போர்டு தடை செய்துள்ளது.

Kaum-De-Heere-7

பஞ்சாபிய கவிஞரும், பாடகருமான ராஜ் காகரே kaum de here என்ற பெயரில் ஒரு திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். இதனை ரவீந்தர் ரவி என்பவர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் கதை 1984 அக்டோபர் 31-ம் தேதியன்று நடந்த இந்திராகாந்தி படுகொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.

Kaum-De-Heere-2

இந்திராகாந்தியை சுட்டுக் கொன்ற பியாந்த்சிங், சத்வந்த் சிங் இருவருமே சீக்கிய இனத்தில் இப்போதும் தியாகிகளாக சொல்லப்பட்டு வருபவர்கள். அவர்களை இப்படம் தியாகிகளாகவே அடையாளம் காட்டுகிறதாம்.. ஆபரேஷன் புளூ ஸ்டார் என்ற பெயரில் அமிர்தசரஸ் பொற்கோவில் வளாகத்திற்குள் ராணுவத்தை அனுப்பி சீக்கிய தீவிரவாதிகளை சுட்டுக் கொல்லச் செய்த இந்திராகாந்தியின் நடவடிக்கையினால் கோபமடைந்த இந்த மூன்று பேரும் இந்திராவை சுட்டுக் கொன்றார்கள். இது பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கைதான். சீக்கிய இனத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்பதை போலவே படமும் சொல்கிறதாம்.

Kaum-De-Heere-1

இப்படம் நேற்று இந்தியாவில் ரிலீஸ் செய்ய வேண்டியிருந்தது. இதற்காக பல லட்சம் செலவில் விளம்பரங்களும் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடைசி நிமிடத்தில் மத்திய சென்சார் போர்டு, இந்தப் படத்துக்கு தடை விதித்துவிட்டதால் நேற்று திரைக்கு வரவில்லை.

Kaum-De-Heere-3

இந்தப் படம் இந்தியாவில் வெளியானால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். மக்களின் அமைதி கெடும்.. நாடு பதற்றத்திற்குள்ளாகும் என்று சென்சார் போர்டு பதிலளித்துள்ளதாம்..! படத்தின் தயாரிப்பாளர் இது குறித்து நீதிமன்றத்திற்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!

Our Score