full screen background image

‘கத்தி’ டிரெயிலரும் சாதனை நிகழ்த்தியது..!

‘கத்தி’ டிரெயிலரும் சாதனை நிகழ்த்தியது..!

‘கத்தி’ திரைப்படம் வருமா வராதா என்கிற எதிர்பார்ப்பில் இந்த நிமிடம்வரைக்கும் இருப்பதால் இது தொடர்பான அனைத்துமே பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது..

நேற்று மதியம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் “இன்று மாலை 6 மணிக்கு ‘கத்தி’ டிரெயிலர் வெளியிடப்படும்…” என்று அறிவித்ததில் இருந்தே, இணையமே கதி என்று கிடந்தவர்கள், கிடப்பவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு..! இந்த ஒரு செய்தியே 4000-த்துக்கும் அதிகமானோரால் ரீஷேர் செய்யப்பட்டிருந்தது..

சரியாக மாலை 6 மணிக்கு டிரெயிலரை வெளியிட்டனர். இப்போது வரையிலும் வெறும் 18 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 9 லட்சம் பேர் இந்தக் ‘கத்தி’ படத்தின் டிரெயிலரை பார்த்திருக்கிறார்கள் என்பதே நிச்சயம் சாதனைதான்.

டிரெயிலர் பெரிதாக ஈர்க்கவில்லையென்றாலும் படத்தின் கதையை சுருக்கமாக சொல்கிறது.. பலரும் இணையத்தில் சொல்லிய கதையாகத்தான் இருக்குமென்று தெரிகிறது..

விஜய்யின் ரசிகர்களான நடிகர்கள் தனுஷ், சிபிராஜ், தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி உள்ளிட்ட பலரும் டிரெயிலரை பார்த்துவிட்டு ‘கத்தி’ படம் வெற்றி பெற வாழ்த்தியுள்ளனர். 

 

Our Score