‘கத்தி’ படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளை சென்னையில் முழு வீச்சுடன் படப்பதிவு செய்யும் வேலையிலும் செப்டம்பர் 20 லண்டனில் நடைபெறும் கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா அமைதியாக நடைபெற வேண்டி அனைத்து உள் அரசியல் வேலைகளையும் கச்சிதமாக செய்து வருகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
‘கத்தி’ படத்தின் உண்மையான தயாரிப்பாளர் லைகா மொபைல் நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் அழகுராஜா. இவர் இலங்கை அதிபர் ராஜபக்சே குடும்பத்தினருக்கு மிக நெருங்கிய நண்பர். பிறப்பால் தமிழராக இருந்தாலும் இனத்திற்கே துரோகம் செய்தவர்.. இப்போதும் தன்னுடைய அனைத்து நிறுவனங்களிலும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு பங்கு அளித்திருக்கிறாராம்.
இலங்கை பத்திரிகைகளே இவருக்கும், ராஜபக்சேவுக்குமான தொடர்பை அம்பலப்படுத்தி கட்டுரைகளை எழுதி வரும் வேளையில் இங்கேயிருக்கும் முருகதாஸும், லண்டன் ஐங்கரன் பிலிம்ஸ் கருணாமூர்த்தியும் விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
வரும் செப்டம்பர் 20-ல் லண்டன் வரும் ‘கத்தி’ படத்தின் பிரமுகர்களுக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாக அங்கேயிருக்கும் தமிழர் அமைப்புகள் சொல்லிவிட்டன. இந்த வேளையில் அவர்களை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் இந்தப் படத்துக்கும் லைகா மொபைல் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நம்ப வைக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
இதே நேரம் ‘கத்தி’ படம் வெளியாகும் சூழலில் இங்கேயிருக்கும் தமிழர் அமைப்புகள் கட்சிகள் ஏதாவது எதிர்ப்புக் காட்டிவிட்டால் படத்தின் கதி என்னாவது என்கிற பதைபதைப்பில் ஐங்கரன் கருணாஸின் உதவியோடு தமிழ் அமைப்புகளின் தலைவர்களை வீடு தேடிச் சென்று பார்த்துக் கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அவரே இன்று டிவீட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் “திருமாவளவன், சீமான், நெடுமாறனை சந்தித்துவிட்டோம்.. வைகோவை சந்திக்க காத்திருப்பதாக..” செய்தியை வெளியிட்டிருக்கிறார். அதாவது அவர்களையெல்லாம் ஆஃப் செய்தாகிவிட்டது.. இனி வைகோ மட்டும்தான் பாக்கி என்பதுதான் பொருள்..
படத்தின் கதாநாயகன் விஜய்யைவிடவும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இதில் அதிக அக்கறை காட்டுவதற்கு ஒரே காரணம்.. பண்ம்தான்.. கத்தி படத்தை இயக்க முருகதாஸுக்கு கிடைத்திருக்கும் சம்பளம் 15 கோடியாம்.. வேறு எந்த தயாரிப்பாளர் தருவார்..?
எல்லாம் பணம் படுத்தும்பாடு..!