full screen background image

‘கத்தி’ திரைப்படத்தின் ரிலீஸுக்கு தடை வராது..!

‘கத்தி’ திரைப்படத்தின் ரிலீஸுக்கு தடை வராது..!

‘கத்தி’ படம் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது..

இதற்காக இப்போதிருக்கும் ஒரே வழி ஆளும் கட்சியை அனுசரித்து போவதுதான் என்கிற உள்ளூர் அரசியலை தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரனுக்கும், ஐங்கரன் கருணாமூர்த்திக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், நடிகர் விஜய்யும் சொல்லியிருப்பார்கள் போலும்..!

வந்த விலைக்கு ஜெயா டிவிக்கு ‘கத்தி’ படத்தை விற்பனை செய்துவிட்டதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை நடக்கவிருக்கும் ‘கத்தி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவைகூட ஜெயா டிவி தனித்து ஷூட் செய்யவிருக்கிறதாம்..!

இந்த நிலையில் ‘கத்தி’ படத்தை எதிர்க்கும் ஈழ ஆதரவு அமைப்புகள் இன்று கமிஷனர் அலுவலகத்தில் ‘கத்தி’ படத்தை திரைக்குக் கொண்டு வருவதை தடை செய்யும்படி கோரி மனுவையும் அளித்துள்ளனர்.

தற்போதைக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்று கூடித்தான் இந்த ‘கத்தி’ படத்தை எதிர்த்து வருகின்றனர். இப்போது ஆளும் கட்சியின் சேனலுக்கே படம் விற்கப்பட்டுவிட்டதால் எதிர்ப்பலைகள் சின்னாபின்னமாகிவிட்டது என்பது உறுதி..

வேல்முருகன் சமீப காலமாக ஆளும் கட்சியுடன் அனுரசணையாகத்தான் போய்க் கொண்டிருக்கிறார். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்கிற ஐடியாவில்தான் கட்சியை நடத்தி வருகிறார். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவர் இப்போதைய அரசை எதிர்க்க துணிய மாட்டார் என்பதால் ‘கத்தி’ படத்திற்கெதிரான மிகப் பெரிய எதிர்ப்பு வலிவிழந்துவிட்டது என்பதை உறுதியாகச் சொல்லலாம். மற்றைய அமைப்புகளின் முடிவுகள் எப்படியோ..?

இன்னும் ஒரேயொரு எதிர்ப்பு கதை தன்னுடையது என்று கதாசிரியர் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருப்பதுதான். அதற்கான சமாதான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருகிறதாம்..

இது முடிந்துவிட்டால் எல்லாம் சுபமே..!

Our Score