விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கதகளி’ திரைப்படம் வரும் 2016 பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘இது நம்ம ஆளு’ படத்தினை அடுத்து பாண்டிராஜ் ‘பசங்க-2’ படத்தினை இயக்கியிருக்கிறார். அந்தப் படமும் முடிந்துவிட்ட உடனேயே நடிகர் விஷாலை வைத்து ‘கதகளி’ படத்தை துவக்கி அதையும் மின்னல் வேகத்தில் படமாக்கி முடித்துவிட்டார். கிளைமாக்ஸ் மட்டும்தான் பாக்கி.
மற்ற போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்தப் படத்தை பொங்கல் தினத்தன்று திரைக்கு கொண்டு வர வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தில் விஷாலுடன் கேத்தரின் தெரசா, நாசர், சூரி, பவன் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியெம், எடிட்டிங் – கே.எ்ல்.பிரவீன், இசை – ஹிப்ஹாப் தமிழா, தயாரிப்பு – விஷால் பிலிம் பேக்டரி.









