படத்தோட பிரமோஷனுக்கு இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ தெரியலை..?
இயக்குநர் பார்த்திபனின் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்துல ஆல்மோஸ்ட் தமிழ்ல நடிக்கிற அனைத்து நடிகர், நடிகைகளும் காசு வாங்காமல், நட்புக்காக.. அதிலும் பார்த்திபனின் மனம் நோகக் கூடாது என்பதற்காக முகத்தைக் காட்டிவிட்டார்கள்.. இன்னும் சிலர் நடிக்கவிருக்கிறார்களாம்.. தப்பித்தவர்கள் ரஜினி, கமல், விஜயகாந்த், அர்ஜூன்தான் போலிருக்கு..
இத்தனை நட்சத்திரங்களை வரிசை கட்டி நடிக்க வைத்தும் இன்னமும் பிரமோஷன் ஆசை அடங்கவில்லை புதுமைப்பித்தன் பார்த்திபனுக்கு.. அடுத்தாக ஒரு போட்டி வைத்திருக்கிறார்..
இந்தப் படத்தின் டைட்டிலான ‘கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்’ என்ற பெயர்களை தமிழ்ச் சினிமாவின் மிகப் பெரிய இயக்குநர்கள் 4 பேர் தங்கள் கைப்பட எழுதிக் கொடுத்தார்களாம். அவர்கள் எழுதிக் கொடுத்ததிலிருந்து ஒவ்வொரு வார்த்தையை எடுத்துப் பயன்படுத்திக் கொண்டாராம் இயக்குநர் பார்த்திபன்.
இப்போது அந்த வார்த்தைகளைப் பார்த்துவிட்டு எந்த இயக்குநர் எந்த வார்த்தையை எழுதியிருக்கிறார் என்பதை மிகச் சரியாகக் கண்டுபிடித்துச் சொன்னால்… ஆயிரம் பொற்காசுகளெல்லாம் இல்லை.. இதே படத்திற்கு 4 டிக்கெட்டுகளை ப்ரீயாக தருவாராம் பார்த்திபன்.
படத்தின் டைட்டில் எழுத்துகள் இதுதான்.
பாருங்கள்.. யோசியுங்கள்.. கண்டுபிடித்துவிட்டால் இந்த ktvimovie2014@gmail.com மெயில் ஐ.டி.க்கு உங்களுடைய பெயர், முகவரி, போன் நம்பருடன் விடைகளை அனுப்பி வையுங்கள். அல்லது கார்த்திக் பிரசன்னா என்பவருடைய எண்ணான 9003840046 இந்த நம்பருக்கு மெஸேஜ் செய்யுங்கள்..
ஆல் தி பெஸ்ட் மக்களே..!