இப்போது குழந்தைகளு்ககு வீட்டில் கதை சொல்வது யார்.? கேள்வி எழுப்புகிறது ‘கத சொல்லப் போறோம்’ படம்..!

இப்போது குழந்தைகளு்ககு வீட்டில் கதை சொல்வது யார்.? கேள்வி எழுப்புகிறது ‘கத சொல்லப் போறோம்’ படம்..!

E-5 Entertainment India Private Limited  நிறுவனம் வழங்க.. ரிலாக்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.கல்யாணம் மற்றும் ஜெயகிருஷ்ணன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் கத சொல்லப் போறோம்.

இந்தப் படம் குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அர்ஜூன், சாமு, ராகுல் அரவிந்த், அருண் அரவிந்த், ரவீணா, ஷிபானா ஆகிய குழந்தைகள் இதில் நடித்துள்ளனர். மேலும், ‘ஆடுகளம்’ நரேன், ‘பசங்க’ சிவக்குமார், விஜயலட்சுமி, ‘முண்டாசுப்பட்டி’ காளி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு   –    ஜெபின்

இசை    –     பவன்

பாடல்கள்    –      கல்யாண் வினோதன்

கலை     –       பத்மநாபன்

நடனம்   –   எஸ்.பாலாஜி

எடிட்டிங்    –    விஜய்

தயாரிப்பு நிர்வாகம் – பெருமாள்

கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம் – எஸ்.கல்யாண்

படம் பற்றி தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன், இயக்குனர் கல்யாண் இருவரும் பேசும்போது, “கூட்டு குடும்பமாக இருந்தபோது தாத்தா – பாட்டி, அம்மா –  அப்பா என்று குடும்ப உறவுகள் எல்லாம் அந்தத் தலைமுறைகளுக்கு கதை சொன்னார்கள். குடும்ப உறவுகள் வேறு மாதிரியான பாதையாகிப் போனதால் இப்போது வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு யார் கதை சொல்வது..? இதை மையமாக வைத்துத்தான் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம்..” என்றனர்.

மேலும் இந்தப் படத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு எழுத்துப் போட்டியும் வைத்திருக்கிறார்களாம்.

இது பற்றி கூறிய இயக்குநர் எஸ்.கல்யாண், “பள்ளி குழந்தைகளுக்கு கதை, எழுத்து ஆர்வம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள ஐந்து லட்சம் விண்ணப்பங்களை தமிழகத்தில் உள்ள எல்லாப் பள்ளிகளுக்கும் கொடுத்து மாணவர்களை சிறுகதை எழுதச் சொன்னோம்.

கொடுத்த 20 நாட்களுக்குள் ஏறக்குறைய ஐம்பதாயிரம் சிறுகதைகளை எழுதி அனுப்பியிருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் நிச்சயம் ஒரு லட்சம் சிறுகதைகள் வரும் என்று நம்புகிறோம்.   அதில் சிறந்த கதைகளை தேர்வு செய்து பரிசு வழங்க உள்ளோம்.

என்னைப் போன்ற இயக்குனர்களை அடையாளம்காட்ட ‘நாளைய இயக்குனர்கள்’ போன்ற களம் இருக்கிற மாதிரி வளரும் தலைமுறை சிந்தனையாளர்களை இனம் காண்பதே எங்களது லட்சியம்…” என்றார் இயக்குநர் எஸ்.கல்யாண்.

Our Score