“குழந்தையாவே இருக்க முடியாதா..?” நடிகை தன்ஷிகாவின் ஏக்கம்..!

“குழந்தையாவே இருக்க முடியாதா..?” நடிகை தன்ஷிகாவின் ஏக்கம்..!

ரிலாக்ஸ் ஆர்ட்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் எஸ்.கல்யாண் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘கத சொல்லப் போறோம்’. இந்தப் படத்தில் குழந்தைகள் அதிகம் பேரை நடிக்க வைத்து சாதனை படைத்திருக்கிறார் இயக்குநர் கல்யாண்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா கமலா திரையரங்கில் நடைபெற்றது. திரையிடப்பட்ட டிரெயிலரில் குட்டீஸ்களின் ராஜ்யம் களை கட்டியிருந்த்து. அதிலும் அவர்கள் பேசும் பஞ்ச் வசனங்கள் தூள் பறத்தின..  இரண்டாயிரம் குழந்தைகளை அழைத்து அவர்கள் அனைவரையும் நடிக்க வைத்து அதன் பிறகுதான் அவர்களில் சிலரை படத்திற்காக தேர்வு செய்தார்களாம்.

அனாதை ஆசிரமத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கும், பக்கத்திலேயே அமைந்திருக்கும் வசதியான பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இடையே நடக்கும் கலாட்டாக்கள்தான் படத்தின் கதையாம்..

இந்த கல்யாண் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக நிறைய குறும்படங்களை இயக்கியவராம். அதோடு “கல்யாண் ஒரு கதை சுரங்கம். எப்போ கேட்டாலும் டக்குன்னு ஒரு கதையைச் சொல்லுவார்..” என்றார் அவருடைய நண்பரான இயக்குநர் ரமேஷ்.

விழாவில் பேசிய நடிகர் நரேன், என் குருநாதர் பாலுமகேந்திரா, “ஒரு இயக்குநர் தன் முதல் படத்தில் குழந்தைகளையும் விலங்குகளையும் நடிக்க வைக்கவே கூடாது. அப்படி நடிக்க வச்சா அனுபவமில்லாமல் படத்தை முடிக்க ரொம்ப கஷ்டப்படுவாங்க..” என்று அடிக்கடி சொல்வார். ஆனால் தன் முதல் படத்திலேயே கல்யாண் அந்த துணிச்சலான வேலையை சிறப்பாக செஞ்சிருக்காரு..” என்று பாராட்டினார்.

படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் தன்ஷிகா பேசும்போது, “படத்துல நிறைய குழந்தைகள் நடிச்சிருக்காங்க. அவங்களையெல்லாம் பார்க்கும்போது நாமளும் சின்ன குழந்தையா இருந்திருக்கக் கூடாதான்னு தோணுது. குழந்தையா இருந்திட்டா எந்த கவலையும் இல்லீல்ல. வளர வளரதான் எல்லாமே வந்து சேருது.. இப்படியொரு எண்ணம் இந்தப் படம் மூலமா எனக்குக் கிடைச்சது..” என்றார் ஆதங்கத்துடன்..

“இப்பவெல்லாம் ஒரு படத்தை தயாரித்து, முடிப்பது முக்கியமில்ல.. இந்தப் படத்தை வாங்கி வெளியிட விநியோகஸ்தர்கள் கிடைக்கணும்.. அதுதான் முக்கியம். அந்த வகையில் எங்களுக்குக் கிடைத்த பெரிய உதவியாக நாங்கள் நினைப்பது ஜெயகிருஷ்ணன் இந்தப் படத்தை வாங்கி வெளியிட முன் வந்ததைத்தான்..” என்கிறார் இயக்குநர், தயாரிப்பாளர் கல்யாண்.

பாடல் வெளியீடும் வித்தியாசமாகவே நடந்தது. படத்தில் நடந்த குழந்தைகள் அனைவரும் ஒன்றுகூட வெளியிட.. நிகழ்ச்சிக்கு வந்திருந்த குழந்தைகள் அனைவரும் அதனை பெற்றுக் கொண்டார்கள்..!

அதான் விநியோகஸ்தர் கிடைச்சுட்டாருல்ல.. சட்டுப்புட்டுன்னு தியேட்டர்களுக்குக் கொண்டு வாங்க..!

Our Score