“இது கஸ்தூரியின் சீப்பான பப்ளிசிட்டி” – நடிகை லதாவின் கோபம்..!

“இது கஸ்தூரியின் சீப்பான பப்ளிசிட்டி” – நடிகை லதாவின் கோபம்..!

நடிகை கஸ்தூரி அடங்கமாட்டார் போலிருக்கிறது..

சமீபகாலமாக ‘கருத்து கந்தசாமி’யாக உருவாகி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சினிமா, அரசியல், விளையாட்டு அனைத்திலும் வாய் வைத்து உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி.  

அரசியல் களத்தில் நாட்டு நடப்பை விமர்சிக்கிறேன் என்று சொல்லி கமல், ரஜினி, பாட்டாளி மக்கள் கட்சியின் இளவரசர் அன்புமணி ராமதாஸ், எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் என்று பலரையும் பதம் பார்த்திருக்கும் கஸ்தூரிக்கு, இதன் மூலமாகக் கிடைத்த பாப்புலாரிட்டியால் கொஞ்சம் மதமும் பிடித்துவிட்டது.

kasturi-actress-1

சென்ற மாதம் நடந்த ஒரு திரைப்பட விழாவில் நடிகர் சிவக்குமார் செல்போனை தட்டிவிட்டதை நினைவுபடுத்தும்விதமாக அவரது மகன் நடிகர் கார்த்தியிடம் கிண்டல் செய்து பேச தொகுப்பாளியிணியாக அழைத்த அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களே தலையில் அடித்துக் கொண்டார்கள்.

இது குறித்து பொதுவெளியில் சர்ச்சை கிளம்ப.. ‘இதெல்லாம் நமக்கு சப்பை மேட்டருப்பா’ என்று தூசியைத் தட்டிவிட்டு போய்விட்டார்.

நேற்றைக்கு இரவு கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்த ‘மாளிகை’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியீட்டு விழாவிலும் கஸ்தூரியின் அலட்டல் பேச்சு ஒலித்தது.

இவருடைய மொக்கையான பேச்சுத்தான் பார்வையாளர்களை பெரிதும் சோதித்தது. கூடவே ரஜினியின் ‘தர்பார்’ படத்துக்கு கஸ்தூரி மேடையில் செய்த மார்க்கெட்டிங் வேலை மாளிகை படத்தின் தயாரிப்பாளர்களையே தர்மசங்கடத்துக்குள்ளாக்கிவிட்டது. அந்த அளவுக்கு மாளிகை பட விழாவில் ‘தர்பார்’ படம் பற்றிப் பேசிப் பேசியே கொன்றுவிட்டார் கஸ்தூரி.

kasthuri-2

பொதுவாக விருந்தினர்கள் மொக்கை போட்டால் ‘சீக்கிரமா முடிங்கப்பா’ என்றுதான் பார்வையாளர்கள் நினைப்பார்கள். ஆனால் நேற்றைக்கு கஸ்தூரி.. ‘சீக்கிரம் முடிச்சிட்டு கிளம்பும்மா’ என்று அனைவரையும் கதற வைத்துவிட்டார்.

இந்தக் கதறலை முடித்துவிட்டு வீட்டுக்குப் போனவர் ஐ.பி.எல். மேட்ச்சை பார்க்க உட்கார்ந்துவிட்டார் போலிருக்கிறது.

நேற்றைய போட்டியில் சி.எஸ்.கே. அணியினர் மந்தமாக விளையாடியைப் பார்த்து கடுப்பான கஸ்தூரி அந்த அர்த்த ராத்திரிலேயே வில்லங்கமான ஒரு டிவீட்டை போட்டு டிவிட்டர் உலகத்திலும் ரகளை செய்துவிட்டார்.

“என்னய்யா இது.. ‘பல்லாண்டு வாழ்க’ படத்துல வாத்தியாரு, லதாவை தடவுனதைவிட அதிகமா தடவுறாங்க. #CSK 81-3 (14 Overs)”

kasthuri-tweet-mgr-latha

என்று கஸ்தூரி போட்டிருந்த டிவீட் இன்றைக்குக் காலையில் இருந்து டிவிட்டர் உலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு நடிகையாக இருந்து கொண்டே இப்படி பேசலாமா..? அதுவும் தமிழகத்தின் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை கேவலப்படுத்துவதுபோல எழுதலாமா..? என்று கடும் கண்டனங்களை சந்தித்து வருகிறார் கஸ்தூரி.

அவர் எழுதிய டிவிட்டர் பக்கத்தில் அவருக்குக் கண்டனம் தெரிவித்தவர்கள் கஸ்தூரி இதுவரையிலும் நடித்திருந்த திரைப்படங்களில் இருந்து மேற்கோள்களையும், புகைப்படங்களையும் காட்டி “மொதல்ல நீ யோக்கியமா..? இதெல்லாம் என்ன..? தடவுறது இல்லையா..?” என்றெல்லாம் சொல்லி திட்டித் தீர்த்து வருகிறார்கள்.

கஸ்தூரி வழக்கம்போல கப்சிப்பென்று ஓவர் நைட்டில் தனக்குக் கிடைத்திருக்கும் பாப்புலாரிட்டியை நினைத்து சந்தோஷத்தில் திளைத்து வருகிறார்.

இது தொடர்பாக நடிகை லதாவிடம் நாம் பேசியபோது கோபத்தில் கொதித்துப் போயிருந்தார்.

latha-2

“நான் 50 வருஷமா நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன். ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை. தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா..?

கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே..? அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே..? எதுக்கு நானும், ‘மக்கள் திலகமும்’ நடிச்ச படத்தைச் சொல்லணும்..?

அவங்கதான் எதுக்கெடுத்தாலும் பெண்ணியம்.. அது… இதுன்னு கருத்துச் சொல்லிட்டிருக்காங்களே.. இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா..? ஒரு பொண்ணே, இன்னொரு பொண்ணை பொதுவெளில அவமானப்படு்த்துற மாதிரி பேசலாமா..?

கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி..” என்று கோபத்தோடு சொன்னார்.

தமிழ்த் திரையுலகம், திரைப்படம், நடிகையர்கள் என்றுகூட இல்லாமல் மற்ற பெண்களையும் தன்னைப் போல சாதாரணமான ஒரு பெண்ணாக நினைத்துப் பார்த்திருந்தால், கஸ்தூரி இப்படியொரு டிவிட்டை போட்டிருக்க மாட்டார்..!

கஸ்தூரிக்கு ஏதாவது ‘மண்டகப்படி’ நடந்தால்தான் அடங்குவார் போலிருக்கிறது..!

Our Score