தயாரிப்பாளர்கள் வசந்த் மற்றும் பிரகாஷ் தயாரித்திருக்கும் படம் ‘கருப்பு காக்கா’.
இந்தப் படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், டேனியல், ‘ராட்டினம்’ சுவாதி, ஜார்ஜ், ‘ஆதித்யா டிவி’ டாப்பா, அஞ்சலி ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குநர் தருண் பிரபு இயக்கியிருக்கிறார்.
‘மொட்டை’ ராஜேந்திரன் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பில் இந்த படம் முழுவதும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறாராம். பிற கதாபாத்திரங்களான டேனியல், சுவாதி, ஜார்ஜ் அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்களாம்.
படம் பற்றி இயக்குநர் தருண் பிரபு பேசுகையில், “இந்த ‘கருப்பு காக்கா’ திரைப்படம் காமெடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் பேய் படம். பேய்களை பற்றி ஆராய்ச்சி செய்து கதை எழுதும் ஒரு எழுத்தாளரின் வாழ்க்கையில நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து காமெடி மற்றும் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக இதனை உருவாக்கியிருக்கிறோம். இந்த படம் ஒரு நல்ல தரமான காமெடி கலந்த திரில்லர் பேய் படமாக வரவிருக்கிறது…” என்றார்.
இந்த ‘கருப்பு காக்கா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் S.D.விஜய் மில்டன் சமீபத்தில் வெளியிட்டார்.