கே.பாலசந்தர் மறைந்தார் என்பது கண்ணீரோடு நிற்க கூடிய துயர சம்பவம் அல்ல. கலைத்துறையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய கே.பாலசந்தர் இழப்பை எண்ணி அழுகின்ற துயர சம்பவமாகும்.
1941-42-ம் ஆண்டுகளில் அறிஞர் அண்ணா நடத்திய ‘திராவிட நாடு’ வார இதழில் நன்னிலம் நண்பர் என்ற தலைப்பில் வாரம் தோறும் ஒரு கட்டுரை வெளிவரும். அந்த நன்னிலம் நண்பர் யாரென்றால் இந்த பாலசந்தர்தான்.
அந்த 1941-1942 ஆண்டுகளிலேயே எனக்கும் அவருக்கும் நட்பும், பழக்கமும் ஏற்பட்டது. அந்த சம்பவங்களை அவரும் நானும் அண்மைக் காலத்திலேகூட மறவாமல் ஒவ்வொரு உரையாடலிலும் பதிய வைத்திருக்கிறோம்.
அவர் மறைந்து விட்டாலும், அவரால் உருவாக்கப்பட்ட கலையுலக சிறப்புகளும், என் போன்ற நண்பர்களிடம் காட்டிய பேரன்பும், என்றைக்கும் யாராலும் மறக்க முடியாதவை. கலையுகம் உள்ளவரை அவர் புகழ் மேலும், மேலும் வளரும்.!