மணிரத்னம் தனது புதிய படத்தினை வரும் ஏப்ரல் மாதத்தில் துவக்குவார் என்று தெரிகிறது.
‘ஓகே கண்மணி’ வெற்றி பெற்ற உடனேயே தமிழ், தெலுங்கு, மலையாளம் மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும்விதமாக ஒரு திரைப்படத்தை துவக்கினார் மணி.
அதில் கார்த்தி, நானி, துல்கர் சல்மான், நித்யா மேனன், தன்ஷிகா மற்றும் பலர் நடிக்கப் போவதாக இருந்தது. ஆனால் கொஞ்சம், கொஞ்சமாக இந்தத் திடடம் கலைந்து போய் படமே டிராப் என்றாகிவிட்டது.
அடுத்து உடனேயே ஹிந்தி படம் ஒன்றை இயக்கப் போகிறார் என்றார்கள். இப்போது அதுவும் இ்லலை என்றாகிவிட்டது.
சமீப நாட்களில் மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது நாம் பவுண்டேஷன் சார்பாக நிவாரணங்களை வழங்கும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் மணிரத்னம்.
இருந்தாலும் சென்ற மாதத்தின் கடைசி வாரத்தில் அவர் முடிவு செய்தபடி அவருடைய அடுத்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது நடிகர் கார்த்திதான் என்பது முடிவாகியுள்ளது. இதனை கார்த்தியும் உறுதி செய்துள்ளார்.
மற்ற விபரங்கள் விரைவில்..