full screen background image

“ஹீரோயின் என்னை அறைஞ்சுட்டாங்க. அப்போ படம் சக்ஸஸ்தான்..” – ஹீரோவின் நம்பிக்கை..!

“ஹீரோயின் என்னை அறைஞ்சுட்டாங்க.  அப்போ படம் சக்ஸஸ்தான்..” – ஹீரோவின் நம்பிக்கை..!

தமிழ்ச் சினிமாவில் நட்பு காதலாய் மலர்வதும், காதல் நட்பால் வளர்வதையும்தான் இதுநாள்வரையும் திரையில் கண்டு இருக்கிறோம். நட்பு காதலுக்கு எதிரியாய் இருந்தால் என்ன நடக்கும் என்பதை கலக்கல் காமேடியோடு சொல்ல வருகிறது ‘கப்பல்’ திரைப்படம். புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கும் இப்படத்தில் காதலுக்கும், நட்புக்கும் இடையே சிக்கி தவிக்கும் இளைஞனாக நடித்திருக்கிறார் வைபவ்.

தனது கதாபாத்திரம் பற்றி சொல்லும் நடிகர் வைபவ், “சினிமாவுக்கு வரும்போது ஷங்கர் சாரின் படத்தில் நடிக்க வேண்டும் என எல்லோரையும் போலவே எனக்கும் கடல் அளவுக்கு ஆசைதான். அந்த ஆசை இந்த ‘கப்பல்’ பயணம் மூலம் நிறைவேறியிருப்பது என் பாக்கியமே.

படத்தில் என் கதாபாத்திரம் இன்றைய இளைஞர்களின் நிலைமையை பிரதிபலிப்பதால் ரசிகர்களை எளிதில் கவரும். எனது நண்பர்களாக வரும் கருணா, அர்ஜுனன், வெங்கட், கார்த்திக் நால்வரும் எனது காதலுக்கு வில்லனாய் வருகிறார்கள். என் காதலை பிரிக்க இவர்கள் எப்படியெல்லாம் திட்டம் போட்டு அது எப்படி பணாலாகிறது என்பதை இயக்குனர் கார்த்திக் மிகவும் நகைச்சுவையாய் படமாக்கியுள்ளார்.

ஹீரோயின் சோனம் பாஜ்வா ஒரு காட்சியில் என்னை கன்னத்தில் அறைவது போன்று படமாக்கப்பட்டது. அப்போது என் கன்னம் சிவக்க, சிவக்க பல டேக்குகள் வாங்கினார் சோனம். நானும் கடைசிவரைக்கும் வலிக்காத மாதிரியே நடிச்சு முடிச்சேன்.. ‘மங்காத்தா’ படத்தில்கூட இதே மாதிரி செம அடி வாங்கினேன். அதுல எனக்கு நல்ல பேர் கிடைச்சுது. இப்போ மறுபடியும் இந்தப் படத்துலேயும் அதே மாதிரி அடி வாங்கியிருக்கேன்.. இதனால் அந்த ‘மங்காத்தா வெற்றி’ செண்டிமெண்ட் இதுலேயும் தொடரும்ன்னு நம்புறேன்..” என்று சிரித்து கொண்டே சொல்கிறார்.

எது, எதுலதான் செண்டிமெண்ட் பார்க்குறதுன்னு இல்லையா ஸார்..?

Our Score