விமலின் ‘கன்னி ராசி’ திரைப்படம் நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது..!

விமலின் ‘கன்னி ராசி’ திரைப்படம் நவம்பர் 27-ம் தேதி வெளியாகிறது..!

கொரனா ஊரடங்கு காரணமாக மாதக் கணக்கில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து புதிய படங்கள் தொடர்ந்து வெளியாகி இருக்கின்றன. இந்தப் பட்டியலில் விமல் நடித்துள்ள ‘கன்னி ராசி’ படமும் இடம் பெற்றுள்ளது.

கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்குநர் எஸ்.முத்துக்குமரன் இயக்கி உள்ளார்.

விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கான ஒளிப்பதிவு பணிகளை எஸ்.செல்வகுமார் மேற்கொள்ள, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ராஜா முகமது படத் தொகுப்புப் பணியை மேற்கொள்கிறார். பாடல்களை யுகபாரதி எழுத, கலா மற்றும் விஜி இருவரும் நடனம் அமைத்துள்ளனர்.

இப்படம் குறித்து பேசிய இயக்குநர் எஸ்.முத்துக்குமரன், “காதல், காமெடி, மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகி இருக்கும் படம் இது.

படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னி ராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார்.

இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரூம் சந்தித்து கொள்ளும் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம். 

இப்படத்தில் விமலும், வரலட்சுமியும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். படம் முழுவதுமே விமலும், வரலட்சுமியும் செய்கின்ற காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் மக்களின் பேராதரவைப் பெறுவது நிச்சயம்…” என்றார் இயக்குநர்.

இத்திரைப்படம் செப்டம்பர் 13-ம் தேதி வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் இப்படம் அப்போது வெளியாகவில்லை.

இப்போது தியேட்டர்கள் திறந்திருக்கும் சூழலில் இம்மாத இறுதியில் நவம்பர் 27-ம் தேதியன்று குடும்பங்களை மகிழ்விக்க ‘கன்னி ராசி’ திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Our Score