‘கண்ணே கலைமானே’ படத்தின் இசையை சோனி மியூஸிக் நிறுவனம் பெற்றுள்ளது..!

‘கண்ணே கலைமானே’ படத்தின் இசையை சோனி மியூஸிக் நிறுவனம் பெற்றுள்ளது..!

திரைப்படங்கள் கவிதையாக உருவாவது முற்றிலும் அரிதான ஒரு சூழல். அத்தகைய படைப்புகள் சினிமாவுக்கே பெருமையளிக்கின்றன. தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமியின் திரைப்படங்களும் தமிழ் சினிமாவுக்கு பெருமையளிக்கும் படங்கள்தான்.

சீனு ராமசாமி, தமிழ் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த மிகச் சிறந்த படங்களையும், அவைகளின் மூலமாக சிறந்த பாடல்களையும் வழங்கியிருப்பதிலேயே இது முற்றிலும் தெளிவாகிறது.

குறிப்பிடத்தக்க ஒரு உதாரணமாக சீனு ராமசாமி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்த ‘தர்மதுரை’ படத்தினை சொல்லலாம். 

அதே கூட்டணி ‘கண்ணே கலைமானே’ என்ற கவித்துவமான தலைப்பை கொண்ட படத்திற்காக மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதும், பாடல்கள் மற்றும் இசை மீதும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும், இந்தப் படத்தில் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்துவே எழுதியிருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த எதிர்பார்ப்பின் காரணமாக இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் வாங்கியிருக்கிறது. மிகச் சிறந்த இசை ஆல்பங்களை மட்டுமே வழங்கி வரும் சோனி நிறுவனம், இசை ரசிகர்களை நிச்சயம் ஏமாற்றாது என்பதால் இந்தப் படத்தின் இசைக்கு இப்போதே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டின் அழகான பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Our Score