கன்னக்கோல் – திரை முன்னோட்டம்

கன்னக்கோல் – திரை முன்னோட்டம்

டாக்டர் வி.ராம்தாஸ் வழங்கும் ராம் பிக்சர்ஸ் சார்பில் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கன்னக்கோல்”.

இதில் நாடோடிகள் பரணி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக காருண்யா அறிமுகமாகிறார் . முக்கிய கதாபாத்திரத்தில் கஞ்சா கருப்பு நடிக்கிறார் மற்றும் இளவரசு, அகோரம், ராஜ்கபூர், சார்லி, செவ்வாளை, சிங்கமுத்து, தீப்பெட்டி கணேசன், பூவைசுரேஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஸ்ரீசெல்வா

பாடல்கள் – முத்துவிஜயன்

இசை – பாபி

எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்

கலை – டாக்டர் ஸ்ரீ

நடனம் – பாபி ஆண்டனி

ஸ்டண்ட் – விஜய்

இணை தயாரிப்பு – அகோரம்

தயாரிப்பு – ராம் பிக்சர்ஸ் டாக்டர் வி.ராம்தாஸ்

கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் வி.எ. குமரேசன்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டதற்கு,  “இதில் பரணி, கஞ்சா கருப்பு, தீப்பெட்டி கணேசன், பூவை சுரேஷ் நால்வரும் திருடர்கள். திருடிய பணத்தில் ஜாலியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த ஊரில் உள்ளவர்கள் அத்தனை பேரும் திருடர்களாக வாழ்ந்து திருந்தியவர்கள். இந்த நால்வர் மட்டுமே திருந்தாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் திருந்தினார்களா இல்லையா என்பதுதான் கதை!

ஒரு ஊரில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை இது. காமெடி கலந்துதான் திரைக்கதை அமைத்துள்ளோம். பாண்டிச்சேரி, புதுக்கோட்டை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

Our Score