full screen background image

“நீதித் துறை மீது எனக்கும் நம்பிக்கையுள்ளது…” – ஜாமீனில் வந்த நடிகை ராகினி திவேதி பேட்டி

“நீதித் துறை மீது எனக்கும் நம்பிக்கையுள்ளது…” – ஜாமீனில் வந்த நடிகை ராகினி திவேதி பேட்டி

கடந்த ஆண்டு பெங்களூருவில் போதைப் பொருள் வழக்கில் கன்னட நடிகைகளான ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட 16 பேரை அந்த மாநில மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகைகள் ராகினி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் பெங்களூரு மாநகர முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து இருவரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடினர். இதை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், சஞ்சனாவுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால், ராகினி திவேதிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இதையடுத்து ராகினி திவேதி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் விசாரணைக்குப் பிறகு கடந்த வாரம் ராகினி திவேதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

150 நாட்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்த நடிகை ராகினி திவேதி, பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. தனது சமூக வலைத்தள பக்கங்களிலும் எதையும் பதிவிடவில்லை.

நேற்றுதான் பெங்களூரில் முதல்முறையாக ஊடகங்களை சந்தித்த நடிகை ராகினி திவேதி நீதித்துறையின் மீது தனக்கிருந்த நம்பிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்.

இது குறித்து அவர் பேசும்போது, மற்ற குடிமகன்களைப் போலவே என்னுடைய உரிமைகளும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ பாதுகாக்கப்பட வேண்டும். கடவுளில் ஆசிர்வாதத்தால் என்னைச் சூழ்ந்திருக்கும் தீமையை நிச்சயமாக வெல்வேன். என்னுடன் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என் குடும்பம், ரசிகர்கள்தான் எனது பலம். நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை இந்தச் சம்பவத்தின் மூலம் மேலும் அதிகரித்துள்ளது…” என்றார்.

Our Score