full screen background image

கல்யாணமாயிட்டா தமிழ்ச் சினிமால ஹீரோயின் சான்ஸ் கிடைக்காது-நடிகை கனிகா கோபம்..!

கல்யாணமாயிட்டா தமிழ்ச் சினிமால ஹீரோயின் சான்ஸ் கிடைக்காது-நடிகை கனிகா கோபம்..!

‘பைவ் ஸ்டார்’ படத்தில் அறிமுகமாகி ‘எதிரி’, ‘ஆட்டோகிராப்’, ‘டான்சர்’, ‘வரலாறு’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் நடிகை கனிகா பச்சைத் தமிழச்சி. மதுரையில் பிறந்தவர்.

2008-ம் ஆண்டு ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவருடன் கல்யாணமாகி ஒரு பையனுக்கு அம்மாவாகவும் ஆகிவிட்டார் கனிகா. இதன் பின்பு தமிழில் சுத்தமாக வாய்ப்பேயில்லாமல் இப்போது மலையாளத்தில் மட்டுமே நல்ல குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

“தமிழில் முன்பு போல நீங்கள் அதிகம் நடிக்கவில்லையே..?” என்று பொழுது போகாத ஒரு மலையாள பத்திரிகை நிருபர் கேட்டுவிட்டார் போலும்.. கனிகா பொரிந்து தள்ளியிருக்கிறார்.

“தமிழ்ச் சினிமாவுலகம் எப்போதுமே திருமணமான நடிகைகளை விரும்புவதில்லை.. திருமணத்திற்கு பின்பும் நான் நடிக்கத் தயாராகத்தான் இருந்தேன். வித்தியாசமான கேரக்டர்களையும் எதிர்பார்த்தேன். ஆனால் வந்ததெல்லாமே வெறும் கிளாமர் ரோல்ஸாத்தான் வந்துச்சு.. “எனக்கு ஏன் இந்த கிளாமர் ரோல்ஸ்..? இப்பவும் சேலை கட்டிய பெண்ணா என்னால நடிக்க முடியாதா..? என்று வந்தவர்களிடம் திருப்பிக் கேட்டேன். அவர்கள் பதில் சொல்லவில்லை..

ஆனால் மலையாளப் படவுலகம் அப்படியில்லை. இங்கே எனக்கு விதவிதமான கேரக்டர்கள் கொடுக்கிறார்கள். இங்கே ஒரு ஹீரோவுக்கு பாட்டியாகூட நான் நடிக்க முடியும்.. பெரிய ரோல்.. சின்ன ரோலுன்னுல்லாம் பார்க்க மாட்டாங்க.. அந்த வகைல தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியைவிடவும் மலையாள சினிமாவுலகம் முதிர்ச்சியானது..” என்று சொல்லியிருக்கிறார்.

யாருப்பா அது… கனிகா அக்காவை இவ்ளோ டென்ஷனாக்கினது..?

Our Score