full screen background image

விஜய்-அஜீத்-கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘கண்டுபிடி கண்டுபிடி’..!

விஜய்-அஜீத்-கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘கண்டுபிடி கண்டுபிடி’..!

மூவி பஜார் நிறுவனம் சார்பில் கல்கி யுவா தயாரிப்பில் ராம் சுப்பாராமன் இயக்கியுள்ள படம் ‘கண்டுபிடி கண்டுபிடி’.

இதில் விஜய், அஜித், கார்த்திக் நடித்துள்ளார்கள். “என்னடா இவர்கள் எப்படி சேர்ந்து நடித்தார்கள்..” என்று யோசிக்கிறீர்களா…? இவர்கள் புது வரவு மாஸ்டர்கள். மாஸ்டர் விஜய், மாஸ்டர் அஜித், மாஸ்டர் கார்த்திக், மாஸ்டர் பழனி என்ற நால்வர் இணைந்து நடித்துள்ளார்கள்.

திரைப்படங்களில் திருமணம் என்பது படத்தின் கடைசியில் சில மணித்துளிகள் வரும் காட்சியாகவே இருக்கும். ஒரு முழு திரைப்படக் கதையும் திருமணச் சூழலில் நடக்கும்படியாக இருந்தால் எப்படியிருக்கும்…? அப்படியொரு கலகலப்பான படம்தான் ‘கண்டுபிடி கண்டுபிடி’.

படத்தின் முன்பாதியில் திருமண மண்டபம், மொய், விருந்து, திருமண சடங்குகள் போன்றவற்றை நகைச்சுவையுடன் விலாவாரியாக சொல்லியிருக்கிறார்கள்.  கலகலப்பாக போகும் கதையில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கும். அது கதையின் போக்கை எப்படி மாற்றம் செய்கிறது என்பதே மீதி கதை.

இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

இயக்குனர்   –     ராம் சுப்பாராமன்

ஒளிப்பதிவு –     சுகுமார்

இசை       –     கல்கி யுவா

பாடல்கள்    –     சினேகன், யுவராஜ் அமிழ்தன்

சண்டைக் காட்சி –  சுப்ரீம் சுந்தர்

கலை       –     பிரபாகரன்

நடனம்      –     தினேஷ்

படத்தொகுப்பு –    ஜி.சசிகுமார்

தயாரிப்பாளர் –    கல்கி யுவா

Our Score