இசைஞானி இளையராஜாவின் பாராட்டு விழாவில் கமல்ஹாசன்-சரிகா சந்திப்பு..!

இசைஞானி இளையராஜாவின் பாராட்டு விழாவில் கமல்ஹாசன்-சரிகா சந்திப்பு..!

1000 திரைப்படங்களுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜாவுக்கு ஷமிதாப் படத்தின் இயக்குநர் பால்கி நேற்று மும்பையில் மிகப் பெரிய அளவுக்கு பாராட்டு விழா நடத்தினார்.

இந்தப் பாராட்டு விழாவில் இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், ரஜனிகாந்த், கமல்ஹாசன் மூவரும் கலந்து கொண்டார்கள். மேலும் அமிதாப்பின் மனைவி ஜெயபச்சன், கவிஞர் குல்சார், நடிகைகள் தபு, தேவி, ஐஸ்வர்யா ராய், சுருதி ஹாசன், அபிஷேக்பச்சன், நடிகர் தனுஷ், ஆகியோரும் வந்திருந்தனர்.

படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த அக்சரா ஹாசனுடன் அவருடைய அம்மா சரிகாவும் வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியின்போது நடிகர் கமல்ஹாசன் தனது மாஜி மனைவி சரிகாவை பார்த்து நலம் விசாரித்து கை குலுக்கியிருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இங்கே :