full screen background image

சின்ன மாமனார் கமல்ஹாசனை இயக்குகிறார் மாப்பிள்ளை மணிரத்னம்..!

சின்ன மாமனார் கமல்ஹாசனை இயக்குகிறார் மாப்பிள்ளை மணிரத்னம்..!

நடிகர் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் 234-வது படத்தை மணிரத்னம் இயக்கவிருக்கிறார் என்பதுதான் இன்றைய தமிழ்ச் சினிமாவின் ஹாட்டஸ்ட் செய்தி.

நாளைய தினம் கமல்ஹாசனின் 68-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று மாலை இதற்கான அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

மணிரத்னம் இயக்கத்தில் கமல் 1987-ம் ஆண்டு நடித்த ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு இருவரும் இணையவில்லை. இப்போது 35 ஆண்டு காலம் கழித்து இருவரும் இந்தப் படத்திற்காக ஒன்றிணைகிறார்கள். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இது குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “35 வருடங்களுக்கு முன், மணிரத்னத்துடன் நாயகன் படத்தில் பணிபுரியத் தொடங்கும்போது, இ​தே அளவு உற்சாகமாக இருந்தேன். தற்போதும் அதே மனநிலை என்னுடன் ஒத்துழைப்பது ஊக்கமளிக்கிறது. இந்த தூண்டுதலில் திரு.ரஹ்மானும் அடங்குவர். திரு.உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து எடுக்கவிருக்கும் இந்தப் படத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்…” என்று சொல்லியிருக்கிறார்.

இது குறித்து மணிரத்னம் பேசும்போது, “கமல் ஸாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்..” என்றார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “விக்ரம்’ மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியன்-2’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு உலக நாயகன் கமல்ஹாசனின் 234-வது படத்தை வழங்குவதற்காக கமல் சாருடன் இணைவது எனக்குக் கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு.

சிறப்பான கதையில் உருவாகும் இந்த படத்தை தயாரிப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். கமல் சார் மற்றும் மணி சார் இருவருமே உலக அளவில் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர்கள்.

இந்த இரண்டு சாதனையாளர்களின் தீவிர ரசிகனாகவும் நான் இருந்து வருகிறேன். இந்த சிறந்த வாய்ப்புக்காக கமல் ஸாருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று சொல்லியிருக்கிறார்.

இந்தப் படம் அடுத்தாண்டு மத்தியில் துவங்கி 2024-ம் ஆண்டு வெளியாகுமாம்.

Our Score