உலக நாயகன், நடிப்புத் திலகம் என்று என்னவெல்லாம் அவரை அழைத்தாலும் காதல் இளவரசன் என்ற பட்டத்திற்கு பொருத்தம் கமலே தவிர வேறில்லை.. அவருக்கு வயசாயிருச்சுன்னு சொன்னா கோபம் வராதா..?
ஆண்ட்ரியாவின் வீடியோ ஆல்பத்தை பெற்றுக் கொள்ள வந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா, “கமல்ஹாசன் எனது நண்பர். பல காலமாக நண்பர்.. அவர் ஒரு நல்ல நடிகர்.. நல்ல மனிதர்.. படிப்பாளி.. அறிவாளி.. இதையெல்லாம் தாண்டி நட்பாளர் என்கிற முறையில் எனக்கு கமல்ஹாசனை நிறைய பிடிக்கும். ஐ லவ் ஹிம்..” என்று அவருக்கே உரித்தான பாணியில் பேசினார்.
பாரதிராஜாவின் பேச்சை துவக்கத்திலேயே இடைமறித்த கமல்.. இது இப்ப ரொம்ப அவசியமா என்றார்.. மேலும் தனது பேச்சின்போது பாராதிராஜாவிடம், உங்ககி்ட்ட யாராச்சும் கேட்டாங்களா இப்போ.. எத்தனை வருஷப் பழக்கம்ன்னு..? என்னைய மாதிரியான நடிகர்களை மேடைல வைச்சுக்கிட்டு இப்படி வெளிப்படையா பேசினா எப்படி..? அதுலேயும் ஆண்ட்ரியா வேற வந்திருக்கு. ஏங்க என்னை இப்படி மாட்டி விடுறீங்க..?” என்றார் கிண்டலாக..!
நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் தங்களது உண்மையான வயதைக் குறி்பபிட்டுப் பேசினால் எப்பவுமே கோபம் வரும். வயது என்ற ஒரு வஸ்துவே தங்களது வாழ்க்கையில் இல்லை என்கிற மனநிலையோடு இருப்பதுதான் அவர்களது தொழிலுக்கு நல்லது என்பார்கள்.. இதற்கு காதல் இளவரசன் கமல்ஹாசனும் விதிவிலக்கல்ல..! இதையே கடைசிவரைக்கும் பாலோ பண்ணுங்க ஸார்..!