‘மிர்ச்சி’ செந்தில்-ஸ்ரீஜா சந்திரன் நடிக்கும் ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’ இணையத் தொடர்..!

‘மிர்ச்சி’ செந்தில்-ஸ்ரீஜா சந்திரன் நடிக்கும் ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’ இணையத் தொடர்..!

சிறந்த பொழுதுபோக்கு OTT தளங்களில் ஒன்றான MX Player-ல் ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’ என்னும் புதிய தொடர் வரும் ஜூலை 22-ம் தேதியன்று வெளியாகிறது.

இணையத்தில் வெளியான ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை’ முதல் பாகம் பெரும் வெற்றியைப் பெற்றதையடுத்து அதே பாணியில் புதிய தொடர் ஒன்றும் தயாராகியுள்ளது.

சுமார் 1.3 கோடி பார்வையாளர்களை ஈர்த்த ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை’ முதல் பாகத்திற்கு கிடைத்த மகத்தான அங்கீகாரம், இக்குழுவினரை அடுத்த பாகத்தை உருவாக்கவும் தூண்டுதலாக அமைந்துள்ளது.

‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’ என்ற பெயரில் உருவாகியிருக்கும் இத்தொடரை ‘மிர்ச்சி பிளே ஒரிஜினல்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

Kalyanam Conditions Apply 2.0 Press Meet Stills (6)

சின்னத்திரையின் நட்சத்திர தம்பதிகளான ‘மிர்ச்சி’ செந்தில் குமாரும், அவரது மனைவி ஸ்ரீஜா சந்திரனும் இந்தப் புதிய தொடரில் இணைந்து நடித்துள்ளனர்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் இணை இயக்குநராக ‘மன்மதன் அம்பு’, ‘கோச்சடையான்’, ‘போலீஸ் கிரி’ மற்றும் ‘லிங்கா’ ஆகிய படங்களிலும், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் உருவான ‘ரங்கூன்’ திரைப்படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய ஜஸ்வினி, இத்தொடரை இயக்கியிருக்கிறார். 

கபிலன் வைரமுத்துவின் எழுத்தில், விஷ்வாவின் ஒளிப்பதிவில், படத் தொகுப்பாளரான பிரேமின் படத் தொகுப்பிலும் இந்தத் தொடர் உருவாகியிருக்கிறது.

இந்த ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’ தொடர் ஆறு எபிசொடுகளைக் கொண்டது. நட்சத்திர தம்பதியரான ஸ்ரீஜா சந்திரன் மற்றும் மிர்ச்சி செந்தில்குமாரின் அன்றாட வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் ஒரு அருமையான ரொமாண்டிக் காமெடி தொடராகும்.

Capture 5.v1

பார்வையாளர்களின் வாழ்க்கையும், ஒரு சினிமா பிரபலத்தின் வாழ்க்கையும் ஒன்று போலவே இருக்கும்விதத்தை இந்தத் தொடர், மிகவும் அழகாக படம் பிடித்து காட்டுகிறது.

ஒரு உயர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த காதல் தம்பதியர், தம் வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் அன்பையும், பாசத்தையும், காதலையும், மோதலையும், ஜனரஞ்சகமாக சொல்கிறது இத்தொடர்.

காதல் திருமணம் என்றாலே குடும்பத்திற்குள் மோதல் என்பது தவிர்க்க முடியாத நிலையில், இரு வேறு மாநிலங்களை சேர்ந்த, வேறுபட்ட கலாசாரத்தை உடைய தம்பதியர் என்பதும் கொஞ்சல் கூடுதல் சுவாரஸ்யத்தை இத்தொடருக்கு தந்திருக்கிறது.

‘மிர்ச்சி’ செந்தில் குமாரும், அவரது மனைவி ஸ்ரீஜா சந்திரனும் இத்தொடரில் நடித்திருக்கும்விதம், காட்சிகளில் மிளிரும் அன்பும், காதலும், அன்றாட வேடிக்கைகளும் ரசிகர்களை பெரிதும் கவரும் என்பதில் ஐயமில்லை.

srijaa chandiran 

இந்தத் தொடர் குறித்து நாயகி ஸ்ரீஜா சந்திரன் பேசும்போது, ‘இத்தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியும், பாராட்டுகளும் எங்களை மிகவும் நெகிழ செய்தன. இதனாலேயே உடனடியாக இதன் அடுத்த பாகத்தையும் வெளியிட வேண்டும் என்று நினைத்தோம். நிஜ வாழ்வில் செந்திலும், ஸ்ரீஜாவும் நடந்து கொள்ளும் விதத்தை பதிவு செய்வதில் எங்களுக்கு எந்தவித சிரமமும் இல்லை…” என்றார்.

நாயகன் ‘மிர்ச்சி’ செந்தில் பேசுகையில், “முதல் பாகம் ஒரு முழுமையான ரொமான்டிக் காமெடி. அதற்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பையும், பாராட்டுகளையும் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.

mirchi sendhil

முதல் பாகத்திற்கு வந்த ஒவ்வொரு பின்னூட்டத்தையும் நாங்கள் படித்தோம். அதிலிருந்து நாங்கள் உணர்ந்து கொண்டது என்னவெனில், இத்தொடரைப் பார்க்கின்ற ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வுடன் இதனை தொடர்புபடுத்திப் பார்த்து கொள்கிறார்கள் என்பதை மிக எளிதாக புரிந்து கொண்டோம்.

அதனால், இந்தப் புதிய இரண்டாவது தொடரில் நாங்கள் மிகவும் கவனமாக, ஆன் லைன் ஷாப்பிங் அடிக்ஷன், சாலைகளில் அதிவேக பயணம், அதிகப்படியான ஸ்மார்ட் போன் உபயோகம், தவறாகிப் போன விடுமுறை திட்டங்கள் என ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரும் தொடர்புபடுத்தி கொள்ளும்விதத்தில் அன்றாட நிகழ்வுகளை தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

இந்த இரண்டாவது தொடர் பற்றிய வாசகர்களின் கருத்துகளுக்காக நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்…” என்றார்.

Kalyanam Conditions Apply 2.0 Press Meet Stills (15)

உலகின் நம்பர் ஒன் பொழுதுபோக்குத் தளமான MX Player தனது சந்தாதாரர்களுக்கு, உயர்தர டிஜிட்டல் நிகழ்ச்சிகளை வழங்குவதில் முன்னணி வகிக்கிறது.

சுமார் 7.5 கோடி பார்வையாளர்களைக் கொண்ட இத்தளம், இந்தியாவின் மிகப் பெரிய பொழுதுபோக்கு தளமாகும். இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் இரண்டு ஸ்மார்ட் போன்களில் ஒன்றில் இந்தத் தளம் தரவிறக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவே ‘பொழுதுபோக்கு’ என்று வரையறுக்கும் வகையில், தரமான நிகழ்ச்சிகளை அனைவரையும் கவரும் வண்ணம் இயங்கும் இந்த தளம், அதன் வாசகர்களுக்கு முற்றிலும் இலவசமாக, விளம்பர வருவாய் மாடலில் இயங்கி வருகிறது. 

MX Player தனது தரமான, பலதரப்பட்ட இணையதள ஸ்ட்ரீமிங் காணொளி லைப்ரரியின் மூலம், சுமார் ஒரு லட்சம் மணி நேர நிகழ்ச்சிகளை, பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வழங்குவதால்,  பலதரப்பட்ட வாசகர்களை தன்னகத்தே பெரிதும் ஈர்த்து வைத்திருக்கிறது.

MX ‘ஒரிஜினல் ஸ்லேட் தொடர்கள்’ மூலம் டிராமா, காமெடி, ரியாலிட்டி மற்றும் ரொமான்ஸ் என அனைத்து தரப்பினருக்குமான உயர்தர நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.

டைம்ஸ் குழுமத்தின் இணையதள அங்கமான டைம்ஸ் இண்டர்நெட்டில் MX Player கடந்த 2012-ம் ஆண்டு முதலே தொடர்ந்து முதல் பத்து வரிசையில் இடம் பெற்றிருக்கும் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனை ஆன்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ்., மற்றும் இணையத் தளத்தில் காணலாம்.

இந்த ‘கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை 2.0’ இணையத் தொடர், MX Player-ல் வரும் ஜூலை 22-ம் தேதி வெளியாகிறது.

 

Our Score