இயக்குநர் கரு.பழனியப்பன் ஹீரோவாக நடிக்கும் ‘கள்ளன்’ படப்பிடிப்பு, கேரள மாநிலம் கொச்சியில் இன்று துவங்கியது. தயாரிப்பாளர் வி.மதியழகன், கேமராவை முடுக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
இயக்குநர் அமீரின் உதவியாளரான சந்திரா இயக்கும் இந்த ‘கள்ளன்’ படத்தில் புது டில்லியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான நிகிதா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
கரு.பழனியப்பன், நிகிதா, நமோ நாராயணன், சௌந்தர்ராஜா ஆகியோர் நடிக்கும் இந்தக் ‘கள்ளன்’ படத்தை, எட்செட்ரா எண்டர்டெயிண்மென்ட் சார்பாக வி.மதியழகன் மற்றும் ஆர்.ரம்யா இருவரும் தயாரிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொச்சியைத் தொடர்ந்து தேனி, போடிமெட்டு பகுதிகளில் நாற்பத்து ஐந்து நாட்கள் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.









