full screen background image

போலீஸ் கதையில் உருவாகியிருக்கும் ‘கள்ளாட்டம்’

போலீஸ் கதையில் உருவாகியிருக்கும் ‘கள்ளாட்டம்’

White House Production சார்பாக  ​சௌன்டியன்.G, பிரகாஷ்.R​​, சுமன்.G ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கள்ளாட்டம்’.  

இந்தப் படத்தில் நந்தா, ரிச்சர்டு, இளவரசு, குமரன் நடராஜன், ஏழுமலை, சாரிகா, உஷாஸ்ரீ, மேக்னா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – உமர் எழிலன், படத் தொகுப்பு – வி.டி.விஜயன், கலை இயக்கம் – மோகன மகேந்திரன், தயாரிப்பு – ஜி.செளண்டியன், ஆர்.பிரகாஷ், ஜி.சுமன், ஒளிப்பதிவு, இயக்கம் – ஜி.ரமேஷ்,

இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ஜி.ரமேஷ் ஏற்கனவே பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘பிரண்ட்ஸ்’, ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’, ‘கிங்’, ‘ஆழ்வார்’,  போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த இவர், முதல்முறையாக இப்படத்தை இயக்கியுள்ளார்.

img_0051

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. நடிகர் கார்த்தி இதில் கலந்து கொண்டு ‘கள்ளாட்டம்’ படத்தின் இசையை வெளியிட்டார்.

இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் நந்தா பேசுகையில், “இந்தப் படத்தின் கதை ஒரு முழுமையான போலீஸ் ஸ்டோரி.  நான் ஏற்கனவே ‘வேலூர் மாவட்டம்’ போன்ற படங்களில்  போலீஸ் ஸ்டோரியில்  நடித்துள்ளேன். ஆனால் இந்தப் படத்தின் கதை வழக்கமான சினிமாவில் வருகின்ற போலீஸ் ஸ்டோரி போல் இல்லாமல், முழுமையாக மாறுபட்ட சினிமாவாக இருக்கும்.

முதலில் என்னிடம் கதையைச் சொல்லும்போதே, இந்தப் படத்தில் ‘நீங்கள் காவல்துறையின் யூனிபார்ம் அணிய தேவையில்லை.. மற்ற படங்களை போல் குடும்பம், செண்டிமென்ட் போன்ற காட்சிகளும்  இப்படத்தில் இல்லை..’ என படத்தின் கதையை 20 நிமிடங்களில் என்னிடம் விளக்கினார் இயக்குநர்.

மேலும் அவர் கதை சொன்னவிதமும்  என்னிடம் முன் வைத்த கருத்தும் மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு முறை விசாரணைக்காக என்னிடம் குற்ற வழக்கின் பைல் ஒன்று வருகிறது. அதை நான் விசாரிக்கத் தொடங்குவதுதான் படத்தின் திரைக்கதை…” என்றார்.

இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ஜி.ரமேஷ் படம் பற்றிப் பேசுகையில், “இந்தப் படத்தில் சொல்லியிருக்கும் கதை நம் நாட்டில் ரொம்ப காலமாக நடந்து வருபவைதான்.. மேலும் நடக்கக் கூடிய குற்றங்களை எதிர்த்து பேசப்படுகிற கதையும்கூட. 

படம் மொத்தமே 90 நிமிடங்கள்தான். முதல் பகுதி 45 நிமிடங்கள். இரண்டாம் பகுதி 45 நிமிடங்கள். படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும்தான். அதுவும் ஒரு கலர்புல்லான கவர்ச்சி பாடலாகும். காதல் தொடர்பான காட்சிகளே படத்தில் இல்லை. படத்தில் கதாநாயகி தோன்றும் காட்சிகளும் குறைவு.

இப்படத்தில் கதை முழுவதும் மிகவும் விறுவிறுப்புடன் பயணிக்கும். கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ளோம். படத்தில் வசனங்கள் மிகவும் குறைவு. ஆனால் ஒவ்வொரு வசனமும் மிக வலிமையானது. படம் துவங்கிய 2 நிமிடங்களில் கதைக்குள் உங்களை இழுத்துவிடும்.  

மொத்தம் 17 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.  இத்திரைப்படம் அனைவரும் ரசிக்கும் வகையில் நல்ல ஒரு திரைப்படமாக அமையும்..” என்றார்.

Our Score