சவாலான கதாபாத்திரங்கள் என்றாலே நடிகர் கிஷோருக்கு மிகவும் பிடிக்கும் போல தெரிகிறது.
நல்ல கதையம்சமுள்ள படங்கள் எந்த ரூபத்தில் வந்தாலும், எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை உடனுக்கு உடன் ஏற்று நடிப்பதில் மூலம் தன நடிப்பு பசிக்கு நிரந்தரமாக தீனி போட்டுக் கொண்டு இருப்பவர்.
இவர் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள ‘கல்கி’ என்ற 45 நிமிட படம் சர்வதேச அளவில் பெரும் பெயர் ஈட்டி தரப்பு போகும் படம் என்று திரை உலக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Pramodh பிலிம்ஸ் என்னும் புதிய பட நிறுவனத்தின் சார்பில் ஸ்ருதி தயாரித்துள்ள, இந்த படத்தில் கிஷோருக்கு இணையாக நடிப்பவர் யாஸ்மின்.
இந்தப் படத்தின் போஸ்டர் பெருமளவில் அனைவரையும் கவர்ந்து உள்ளது என்றால் அது மிகையாகாது.
புதிய இயக்குநரான திலீப் படத்தை இயக்கியிருக்கிறார். பிரபல பத்திரிகையாளரான பரத்வாஜ் ரங்கன் படத்திற்கு திரைக்கதை அமைத்து வசனம் எழுத, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, கிரிஷ் இசை அமைத்துள்ளார்.
“இந்தப் படத்தின் தலைப்பே கதையைச் சொல்லும். ‘கல்கி’ என்றாலே அழிப்பவர் என்றுதான் அர்த்தம். பல வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் ‘கல்கி’ கலந்து கொண்டு நமது நாட்டுக்கு சிறப்பு செய்யவிருக்கிறது. கலை இயக்குனர் ரெம்போனின் பணி மிகவும் போற்றத்தக்கது. கிஷோரின் நடிப்பு அவருக்கு சர்வதேச அளவில் பெயர் வாங்கி கொடுக்கும்..” என்கிறார் தயாரிப்பாளர் சுருதி.