full screen background image

கல்கண்டு – திரை முன்னோட்டம்

கல்கண்டு – திரை முன்னோட்டம்

‘ராட்டினம்’ படத்தைத் தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்து மிக பிரம்மாண்டமான செலவில் தயாரித்திருக்கும் படம்தான் இந்த ‘கல்கண்டு.’

இந்த படத்தில் பிரபல நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் கதாநாயகனாக அருமுகமாகிறார். இவரை அறிமுகப்படுத்துவதற்கு முன் இரண்டு மாதங்கள் அவருக்கு நடிப்பு, நடனம், சண்டை இவற்றில் தகுந்த பயிற்சி கொடுத்தபிறகே காமிரா முன் நிற்க வைக்கப்பட்டாராம். டிம்பிள் சோப்டே ஹீரோயினாக நடிக்கிறார். இவர் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். வீர சிவாஜியின் படைத் தளபதிகளாக பணியாற்றிய பரம்பரையை சேர்ந்தவர்.

மற்றும் மனோபாலா, மயில்சாமி, சாமிநாதன், “டாடி ஒரு டவுட் “ செந்தில், முத்துராமன், டி.பி.கஜேந்திரன், ஸ்ரீரஞ்சனி, ஜெனிபர் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் மூலம் நகைச்சுவையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பார் ஜெனிபர்.

ஒளிப்பதிவு   –   கே.வி.சுரேஷ்

பாடல்கள்  : மதன்கார்க்கி, விவேகா, யுகபாரதி, அண்ணாமலை

இசையமைப்பு : கண்ணன்

நடனம்   –  சுஜாதா, தினா, தினேஷ்

ஸ்டண்ட்   –  தளபதி தினேஷ்

எடிட்டிங்   – சுரேஷ் அர்ஷ்

கலை    –  ஜனா

தயாரிப்பு    –  J. மகாலட்சுமி

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : A.M.நந்தகுமார்.

இவர் விஜயகாந்த் நடித்த ‘தென்னவன்’, பிரஷாந்த் நடித்த ‘ஜாம்பவான்’ போன்ற படங்களை இயக்கியவர். அத்துடன் ஜப்பான் மொழியில் அங்குள்ள சூப்பர் ஸ்டாரான நம்ரா, நேகாதுபியா, சைனா கதாநாயகி கெட்டி ஆகியோர் நடித்து அமோக வெற்றி பெற்ற ‘Dancing With Ninjaa’ என்ற படத்தையும் இயக்கியவர்.

“கல்கண்டு’ படம் எப்படி இருக்கும்..?” என்று இயக்குனர் A.M.நந்தகுமாரிடம் கேட்டோம்.

“கல்கண்டு’ எந்த வடிவத்தில் இருந்தாலும் சுவையில் ஒரு சதவீதம்கூட மாற்றம் இருக்காது. அது மாதிரி திரைக்கதை வடிவத்தில் இந்த ‘கல்கண்டு’ படமும் சுவையானதாக இருக்கும்.   படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. சென்னை, நாகை, காரைக்குடி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. எல்லா தரப்பு மக்களும் இந்த ‘கல்கண்டை’ ரசிப்பார்கள்..” என்றார் இயக்குனர் A.M.நந்தகுமார்.

Our Score