full screen background image

‘களவுத் தொழிற்சாலை’ படத்தில் கால்பந்து போட்டியின் பின்னணியில் பாடல்..!

‘களவுத் தொழிற்சாலை’ படத்தில் கால்பந்து போட்டியின் பின்னணியில் பாடல்..!

எம்.ஜி.கே. மூவி மேக்கர் சார்பில் எஸ்.ரவிசங்கர் தயாரிக்கும் படம் ‘களவு தொழிற்சாலை’.

இந்தப் படத்தில் ஜெய்ருத்ரா, வம்சி கிருஷ்ணா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகியாக மும்பையை சேர்ந்த குஷி அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மு.களஞ்சியம் நடிக்கிறார். மற்றும் நட்ராஜ் பாண்டியன், செந்தில், ரேணுகா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – வி.தியாகராஜன் (இவர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் உதவியாளர்)

இசை – ஷியாம் பெஞ்சமின் (இவர் ஹரீஷ் ஜெயராஜிடம் பணியாற்றியவர்)

பாடல்கள் – அண்ணாமலை, நந்தலாலா

படத்தொகுப்பு – யோகா பாஸ்கர்

நடனம் – சங்கர்

சண்டை பயிற்சி – எம்.கே.லீன்

கலை – முரளிராம்

நிர்வாக தயாரிப்பு – எஸ்.என்.அஸ்ரப்

இணை தயாரிப்பு – பிரியதர்ஷினி ரவிசங்கர்

தயாரிப்பு – S. ரவிசங்கர்

கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் – T.கிருஷ்ணசாமி

படம் பற்றி இயக்குனர் கிருஷ்ணசாமி கூறுகையில், “சர்வதேச சிலை கடத்தலின் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் மூன்று பாடல்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. திரைப்படத்தின் இறுதி பகுதிக்கு முன்பு இடம் பெறும் ஒரு பாடல் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

‘ஒரு நொடியிலே உன்னை மாற்றலாம்’ என்று தொடங்கும் இந்த பாடல் ஆல்பம் பேட்டனில் படமாக்கப்பட்டிருக்கிறது. சென்னையை அடுத்த தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பல ஏக்கர் பரப்பளவு உள்ள விளையாட்டு மைதானத்தில் கால்பந்து நடைபெற்று கொண்டிருக்கும் பின்னணியில் ஒரு இளம் பெண், சில தோழிகளுடன் சேர்ந்து ஆடுவது போல இப்பாடல் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது.

இதில் 150-க்கும் மேற்பட்ட உண்மையான கால்பந்து வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அடுத்த மாதத்தில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவதால் கால்பந்து ரசிகர்களையும் கவரும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் மோட்டிவேசன் பாடல் வரிசையில், இது ஒரு புதிய பாணி பாடலாக இருக்கும். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது…” என்றார்.

Our Score