2012-ம் ஆண்டு சுந்தர்.C. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், அஞ்சலி ,ஓவியா நடிப்பில் வெளிவந்த படம் ‘கலகலப்பு.’
முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவான இந்தப்படம் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பேமிலி ஆடியன்ஸையும் கவர்ந்து சூப்பர் ஹிட் படமாக வசூல் சாதனை படைத்தது.
இப்போது ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாம் பாகத்தை அவ்னி மூவி மேக்கர்ஸ் சார்பில் நடிகை குஷ்பு தயாரித்துள்ளார்.
இந்த ‘கலகலப்பு–2’ ஆம் பாகத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ராதாரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
எழுத்து – இயக்கம் – சுந்தர். C., திரைக்கதை – வேங்கட்ராகவன், தயாரிப்பாளர் – குஷ்பு சுந்தர், ஒளிப்பதிவு – U.K.செந்தில்குமார், வசனம் – பத்ரி, இசை – ஹிப் ஹாப் ஆதி, பாடல் – மோகன் ராஜ், படத் தொகுப்பு – ஸ்ரீகாந்த், கலை – பொன்ராஜ், சண்டை பயிற்சி – தினேஷ், நடனம் – ஷோபி, பிருந்தா, ஒப்பனை – செல்லத்துரை, ஆடை வடிவமைப்பு – ராஜேந்திரன், பாலு, ஸ்டில்ஸ் – V. ராஜன், தயாரிப்பு மேற்பார்வை -பால கோபி, நிர்வாக தயாரிப்பு – A.அன்பு ராஜா,
‘கலகலப்பு-2’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், படத்தின் டீசரை டிசம்பர் 24-ம் தேதி இரவு 11 மணிக்கு படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
கலர்புல்லான இந்த ‘கலகலப்பு-2’ படத்தின் டீசர் யூ டியூப்பில் டிரெண்டாகி தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
‘கலகலப்பு-2’ படம், 2018, ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது.