டி.சிவா தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ திரைப்படம்

டி.சிவா தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ திரைப்படம்

‘தெய்வ வாக்கு’, ‘சின்ன மாப்ளே’, ‘ராசையா’, ‘அரவிந்தன்’ போன்ற பிரம்மாண்டமான படங்களை தயாரித்தவர் அம்மா கிரியேஷன்ஸ் ​T​.சிவா. கடைசியாக வசந்தபாலன் இயக்கத்தில் 'அரவான்' படத்தைத் தயாரித்திருந்தார். இப்போது மீண்டும் மற்றொரு பிரம்மாண்டமான படைப்பாக ‘கடவுள் இருக்கான் குமாரு’ என்ற படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் ​G.V.​பிராகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அவிகா கோர் நடிக்கிறார் மற்றுமொரு கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கவுள்ளார்.

மேலும் தம்பி ராமையா, பிரம்மானந்தம், R.J.பாலாஜி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரோபோ ஷங்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். ஒளிப்பதிவு - சக்தி சரவணன், கலை – வைர பாலன்.

‘சிவா மனசுல சக்தி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’  ஆகிய படங்களின் மூலம் அனைவரையும் கவர்ந்த ராஜேஷ்.M மீண்டும் தனக்கே உரித்தான காமெடி, காதல் கலந்து இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு தள தேடுதலுக்காக இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குநர் பாண்டிச்சேரியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு தளங்களாக கடற்கரை ஓரங்களே தேந்தேடுக்கப்பட்டுள்ளன.  கோவா, பாண்டிச்சேரி மற்றும் விசாகபட்டிணமே படத்தின் முக்கிய படப்பிடிப்பு தளங்களாக இருக்குமாம்.

“பயணங்களில் உருவாகும் சந்திப்புகள் என்றுமே சுகமான நினைவுகள்தான். அப்படி ஒரு பயணத்தில் இரண்டு பெண்களை நாயகன் சந்திக்கிறான். நாயகனை ஒருத்தி காதலிக்க, நாயகனோ மற்றொருவளை காதலிக்கிறார். இதன் முடிவு படுசுவாரஸ்யமாக இருக்கும்..” என அடித்துச் சொல்கிறார் இயக்குநர் ராஜேஷ்.M.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு  மார்ச் மாத முதல் வாரத்தில் சென்னையில் துவங்கவுள்ளது.