full screen background image

“யாஷிகா நிச்சயம் எழுந்து வருவார்”-காத்திருக்கும் ‘கடமையை செய்’ படக் குழு

“யாஷிகா நிச்சயம் எழுந்து வருவார்”-காத்திருக்கும் ‘கடமையை செய்’ படக் குழு

“கடமையை சரியாக செய்தால் அதற்கான பலன் தானாக வரும்” என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது ‘கடமையை செய்’ திரைப்படம்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக  S.J.சூர்யா நடித்துள்ளார், கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மற்றும்  மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா, சேஷு, TSR, ராம்ஜி, ஜெயச்சந்திரன், ஹலோ கந்தசாமி, அரவிந்த், ஷர்மிளா, கீர்த்தி, மணிமேகலை, கிருஷ்ணவேணி, ரேகா, உமா, நிஷா, ஜெயவேல், பேபி ஹர்ஷிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் சுந்தர்.C-யிடம், உதவியாளராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியதோடு அவரை நாயகனாக வைத்து முத்தின கத்திரிக்காய்’ என்ற வெற்றிப் படத்தை இயக்கிய  வேங்கட் ராகவன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

நெடுநல்வாடை’, ‘எம்.ஜி.ஆர்.மகன்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வினோத் ரத்னசாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.  படத்தொகுப்பு – N.B.ஸ்ரீகாந்த், தடம்’ படத்திற்கு இசையமைத்த அருண்ராஜ் இசையமைத்துள்ளார்,  பாடல்கள் – அருண்பாரதி,  சண்டை பயிற்சி – பிரதீப் தினேஷ்,  நடன இயக்கம் தீனா – சாண்டி, மக்கள் தொடர்பு –  மதுரை செல்வம், மணவை புவன், தயாரிப்பாளர்கள் – கணேஷ் எண்டர்டெயின்மெண்ட் TR ரமேஷ், நாகர் பிலிம்ஸ்  ஜாகிர் உசேன்.

இந்தப் படத்தில் எஸ்ஜே.சூர்யாவிற்கு டபுள் டைம் ஸ்டிராங் கேரக்டர். அவர் இப்படித்தான் இருப்பார் என்ற மனநிலையில் இருப்பீர்கள். ஆனால் இந்த படத்தில் அவர் அப்படி இருக்க மாட்டார். முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கிறார்.

ஃபேமிலி ஆடியன்ஸ்ல இருந்து அத்தனை பேரையும் கவர்ந்து இழுக்கக் கூடிய படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த அசாதாரண சூழ்நிலையிலும் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் ‘கடமையை செய்’  திரைப்படம் படப்பிடிப்பு சிறப்பாக நிறைவுற்றது. தற்போது படத்தின் POST PRODUCTION வேலைகள் வெகு தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் படத்தின் நாயகியான யாஷிகா ஆனந்த் சாலை விபத்தில் சிக்கியது இந்தப் படக் குழுவினரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இது குறித்து பேசிய இயக்குநர் வேங்கட் ராகவன், “படப்பிடிப்பு இனிதே முடிந்தது’ என்று நாங்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த நிலையில்தான் யாஷிகா வாகன விபத்தில் சிக்கி, அவருடன் சென்ற தோழி மரணம் அடைந்த நிலையில் படுகாயத்துடன் உயிர் தப்பியிருக்கிறார் என்ற செய்தி எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

யாஷிகா ஆனந்த் தொழில் ஈடுபாடும், திறமையும் மிக்கவர் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இத்திரைப்படம் மிகவும் நன்றாக வந்துள்ளதாக அனைவரும் கூறும் நிலையில், ஒரு நல்ல வெற்றியை நோக்கிய அவர் திரை பயணத்தின் இடையில் இது போன்ற விபத்து ஏற்பட்டிருப்பது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிச்சயமாக யாஷிகா நலம் பெற்றுத் திரும்புவார். எங்களுடைய படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது..” என்றார்.

 
Our Score