‘கடலை போட ஒரு பொண்ணு வேணும்’ படத்தில் யோகி பாபுவின் அதகள காமெடி!

‘கடலை போட ஒரு பொண்ணு வேணும்’ படத்தில் யோகி பாபுவின் அதகள காமெடி!

“போகி இல்லாமல் பொங்கல் வராது. அதுபோல் தற்போது தமிழ்த் திரையுலகத்தில் யோகி பாபு இல்லாமல் எந்தப் படமும் வராது” என்று சொல்லும் அளவுக்கு நடிகர் யோகி பாபுவின் கொடி, கோடம்பாக்கத்தில் கொடி கட்டிப் பறக்கிறது.

யோகி பாபுவை காமெடியில் புகுத்தி பல படங்கள் வெற்றி பெற்று வரும் நிலையில், யோகி பாபுவை முழுக்க முழுக்க கதையின் நாயகனாக வைத்து, ‘கடலை போட ஒரு பொண்ணு வேணும்’ என்ற படம் தயாராகியிருக்கிறது.

இந்தப் படத்தை R.G.மீடியா நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் D.ராபின்சன் தயாரித்துள்ளார்.  

இந்தப் படத்தில் யோகிபாபு  பெரிய பில்லர் என்றால், இன்னோரு ஹீரோவான அசார் பெரிய எனர்ஜி. சின்னத்திரை மூலமாக மக்களை மகிழ்வித்த அசாருக்கு இப்படம் பெரிய திரையில் நல்லதொரு விசிட்டிங் கார்டாக அமையும்.

மேலும் இத்திரைப்படத்தில் சாஜித், மன்சூர் அலிகான், செந்தில், சுவாமிநாதன், தீனா, மனோகர், காஜல், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இனியன் J.ஹரிஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, ஜீபின் இசை அமைத்துள்ளார்.

124A3929

படத்தின் இயக்குநரான ஆனந்த்ராஜன் படம் பற்றிக் கூறும்போது, “யோகிபாபுவின் இன்னொரு பரிணாமத்தை இந்தப் படம் காட்டும். வழக்கமாக படங்களில் காமெடியை தொழிலாகப் பண்ணும் யோகி பாபுவைப் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தில் யோகி பாபு பண்ணும் தொழிலே, பக்கா காமெடியாக இருக்கும்.

யோகிபாபு செய்யும் தொழிலுக்கு இடது, வலதாக இருக்கும் அடியாட்கள் அனைவருமே பெண்கள்தான். அந்தப் பெண்களை அவர் கடலை போட்டு உஷார் பண்ணுவார் என்பதுதான் படத்தின் ஹை பாயிண்ட் காமெடி.

கடலை போட்டு, கடலை போட்டு பெண்களை உஷார் செய்து ரவுடித் தொழில் செய்யும் அவரிடம் கடலை போட பெண் தேடும்  ஹீரோவான அசார், மாட்டிக் கொண்டு முழிப்பது நகைச்சுவை கலாட்டாவாக இருக்கும்.

முழுக்க முழுக்க மக்களை ஜாலியாக எண்டெர்டெயின்மெண்ட் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிற படம் இது. நிச்சயம் இந்தப் படம் கமர்சியலாக பெரிய வெற்றி பெறும். அதற்கான எல்லா சாத்தியங்களையும் படத்தில் கையாண்டிருக்கிறோம்..” என்றார் இயக்குநர் ஆனந்த்ராஜன்.

இவர் நேர்த்தியான இயக்குநர் என பெயர் பெற்ற சமுத்திரக்கனியிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.

Our Score