full screen background image

தீபாவளி தினத்தில் சின்னத்திரையில் வரவிருக்கும் ‘கபாலி’ திரைப்படம்

தீபாவளி தினத்தில் சின்னத்திரையில் வரவிருக்கும் ‘கபாலி’ திரைப்படம்

கடந்த ஜூலை மாதம் வெளியாகி உலக அளவில் பெரும் வசூலைக் குவித்து வெற்றி பெற்ற ரஜினியின் ‘கபாலி’ திரைப்படம் முதல்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. ஆனால் தமிழில் அல்ல… மலையாள தொலைக்காட்சியில்.

மலையாள ஆசியாநெட் தொலைக்காட்சியில் வரும் தீபாவளியன்று ‘கபாலி’ படம் ஒளிபரப்பாக இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘கபாலி’ படத்தின் தமிழ் தொலைக்காட்சி உரிமையை ஜெயா தொலைக்காட்சி நிறுவனம்தான் வாங்கியுள்ளது. இந்தத் தீபாவளிக்கே ஜெயா தொலைக்காட்சியே ‘கபாலி’யை வெளியிட்டிருக்கலாம். ஆனால் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதால் அதிக கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று ஜெயா டிவி முடிவெடுத்துவிட்டதால் ‘கபாலி’ கொண்டாட்டம் தமிழில் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டதாம்.

மலையாள தொலைக்காட்சியில் ‘கபாலி’ ஒளிபரப்பானாலும், ‘கபாலி’யின் தமிழ் பதிப்பைத்தான் மலையாள ரசிகர்கள் பார்க்கவிருக்கிறார்கள். ஏனெனில் ‘கபாலி’ படம் கேரளாவில் நேரடி தமிழ்ப் படமாகத்தான் வெளியானது.

கேரளாவில் ‘கபாலி’ ரிலீஸானபோது, இதுவரை கேரளாவில் வேறு எந்தப் வேற்று மொழி படமும் குவிக்காத பெரும் வசூலைக் குவித்தது கபாலி.

தீபாவளி தினத்தை நம்ம ‘கபாலி’யுடன் கொண்டாடுகிறார்கள் மலையாளத்து மக்கள்..!

Our Score