‘காவல் துறை உங்கள் நண்பன்’ படத்தை ஜி.தனஞ்செயன் வெளியிடுகிறார்..! 

‘காவல் துறை உங்கள் நண்பன்’ படத்தை ஜி.தனஞ்செயன் வெளியிடுகிறார்..! 

B.பாஸ்கரன், P.ராஜ பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி ஆகியோர் BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘காவல் துறை உங்கள் நண்பன்’.

இந்தப் படத்தில் சுரேஷ் ரவி மற்றும் ரவீணா ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ‘மைம்’ கோபி, ‘கல்லூரி’ வினோத், சரத் ரவி, சூப்பர் குட் சுப்ரமணி, ஆர்.ஜே.முன்னா மற்றும் பிரபல நடிகர்கள் சிலர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இசை – ஆதித்யா சூர்யா, ஒளிப்பதிவு – விஷ்ணுஸ்ரீ, படத் தொகுப்பு – வடிவேல், விமல்ராஜ், கலை இயக்கம் – ராஜேஷ், சண்டை இயக்கம் – ஓம் பிரகாஷ், வசனம், பாடல்கள் – ஞானகரவேல்.எழுத்து, இயக்கம் – ஆர்.டி.எம்.

இப்போது இந்தப் படத்தினை தயாரிப்பிலும், விநியோகத்திலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை குவித்து பெருமையுடன் வலம் வரும் Creative Entertainers நிறுவனர் G.தனஞ்செயன், வெளியிட இருக்கிறார்.

இது குறித்து தயாரிப்பாளர் G.தனஞ்செயன் பேசும்போது, “நாங்கள் Creative Entertainers சார்பில் தரமான கதைகள் கொண்ட படங்களையே தயாரிப்பதையும், விநியோகிப்பதையும் முதல் நோக்கமாக கொண்டு இயங்கி வருகிறோம்.

ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறும் அதே நேரம் அவர்களுக்கு தரமான கதைகளை தரவேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கிறோம். இந்த நோக்கம் 2020-ம் வருடத்தில் பல நல்ல தரமான படங்களை  விநியோகிக்கும் பயணத்தில் எங்களை கொண்டு வந்திருக்கிறது.

இப்பயணத்தில் இந்த ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படம் ஒரு அற்புதமான தேர்வாக எங்கள் முன்னால் வந்தது. இப்படத்தை பார்த்தபோது தயாரிப்பு மற்றும்  விநியோகத்தில் எங்கள் நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும் படைப்பாக இப்படம் விளங்கும் என்று தோன்றியது.

மிக வலுவான கதையும், திரைக்கதையும் கொண்ட இப்படம் இயக்குநர் RDM-ன் இயக்கத்தில் எதார்த்தமான பாணியில் வெகு அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை ஒரு நொடி அசைய விடாமல் கட்டிப் போடும் தன்மையில் அசத்தலாக படத்தை தந்துள்ளார் இயக்குநர் RDM.

படத்தின் ஒவ்வொரு பாத்திரத்தையும் ஏற்றிருக்கும் சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, சரத் ரவி, R.J.முன்னா, சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள். படத்தின் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் பிரமிப்பான பங்களிப்பை தந்துள்ளார்கள்.

இத்திரைப்படத்தை பிரமாண்டமாக வெளியிட, திரையரங்குகளின் எண்ணிக்கை உட்பட விநியோக திட்டங்களை வகுத்து வருகிறோம். மிக விரைவில் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளோம்…” என்றார்.

Our Score