‘காற்றின் மொழி’ – பாடல் எழுதும் போட்டி – தேர்வு பெற்றவர்களுடன் ஒரு கலந்துரையாடல்!

‘காற்றின் மொழி’ – பாடல் எழுதும் போட்டி – தேர்வு பெற்றவர்களுடன் ஒரு கலந்துரையாடல்!

பாப்டா நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் G.தனஞ்ஜெயன் தயாரித்து, ஜோதிகா, விதார்த் நடிப்பில், இயக்குநர் ராதா மோகன் இயக்கியுள்ள திரைப்படம் ‘காற்றின் மொழி’.

இந்தக் ‘காற்றின் மொழி’ திரைப்படத்தின் படக் குழு, பாடல் எழுதும் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது.

இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதிலுமிருந்தும் 700 பேர் பங்கேற்று இருந்தார்கள். அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 66 பேர் ‘காற்றின் மொழி’ பாடல் எழுதும் போட்டி சார்ந்த விழாவில் பங்கேற்றனர்.

இதில் பாடலாசிரியர் மதன் கார்க்கி, இயக்குநர் ராதாமோகன் உள்ளிட்ட ஜாம்பவான்கள் பலரும் பங்கேற்று பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் படத்தின் பாடல் சிடி வழங்கப்பட்டது.

மேலும், சிறப்பாக பாடல் எழுதிய இருவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பாடலாசிரியர் மதன் கார்க்கி எல்லோரிடமும் தான் ‘காற்றின் மொழி‘ படத்துக்கு பாடல் எழுதிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். 

IMG_20181012_174426 IMG_2650

 

Our Score