‘காற்றின் மொழி’ திரைப்படத்திற்கு டப்பிங் பேசி முடித்தார் சிம்பு..!

‘காற்றின் மொழி’ திரைப்படத்திற்கு டப்பிங் பேசி முடித்தார் சிம்பு..!

இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘காற்றின் மொழி’.

பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் இப்படத்தில்  ஜோதிகா நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தனஞ்ஜெயன், S.விக்ரம்குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் மூவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

நடிகர் சிம்பு இத்திரைப்படத்தில் ஒரு கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இது பற்றிப் பேசிய தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன், “இந்தப் படத்தில் FM ரேடியோ ஷோ ஒன்றில் கதாநாயகி ஜோதிகாவுடன், திரைப்பட நட்சத்திரமாக சிம்பு தோன்றுவது போல் காட்சி இடம் பெறுகிறது.

simbu-kaatrin mozhi-2

அவர் வரும் காட்சிகள் பற்றிக் கேட்டதும் சிம்புவுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜோதிகாவுடன் திரையில் தோன்றுவதில் மேலும் ஒரு மகிழ்ச்சி. ‘ஜோதிகா மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. கண்டிப்பாக இதில் நடிக்கிறேன்’ என்று சொல்லி நடித்துக் கொடுத்தார் சிம்பு.

இந்தக் காட்சிக்கான டப்பிங்கை சிம்பு சமீபத்தில் பேசி முடித்திருக்கிறார். அப்போது தன்னுடைய காட்சி சிறப்பாக வந்துள்ளதாக கூறினார். அவர் இந்த படத்தில் பணியாற்றியது படத்துக்கு பெரிய பலம். அவருக்கும் இந்த படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி…” என்றார் தாயாரிப்பாளர் தனஞ்ஜெயன்.  

‘காற்றின் மொழி’ போஸ்ட் புரொடக்சன் வேலைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வருகிற அக்டோபர் 18-ம் தேதியான ஆயுத பூஜையின் சிறப்பு வெளியீடாக இத்திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது இத்திரைப்படம். அதே அக்டோபர் 18-ம் தேதிதான் படத்தின் நாயகியான ஜோதிகாவின் பிறந்த நாள் என்பது கூடுதல் தகவல்.

Our Score