ராதா மோகனின் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ துவங்கியது..!

ராதா மோகனின் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ துவங்கியது..!

பாப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் G.தனஞ்ஜெயன், S.விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘காற்றின் மொழி’.

இந்தப் படம் சென்ற ஆண்டு ஹிந்தியில் வித்யா பாலன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘துமாரி கலு’ படத்தின் ரீமேக்காகும். தமிழுக்காக படத்தின் திரைக்கதையில் சிற்சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.

தமிழில் வித்யா பாலன் கேரக்டரில் ஜோதிகா நடிக்கிறார். மேலும், இப்படத்தில் விதார்த், லட்சுமி மஞ்சு, M.S.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா  பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

இசை - A.H. காஷீப், பாடல்கள் - மதன் கார்க்கி, ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி, கலை இயக்கம் - கதிர், உடை வடிவமைப்பு - பூர்ணிமா, படத் தொகுப்பு - பிரவீன் K.L., வசனம் – பொன்.பார்த்திபன், மக்கள் தொடர்பு - ஜான்சன். 

இந்தப் படத்தை தமிழின் முதன்மையான இயக்குநர்களில் ஒருவரான ராதா மோகன் இயக்குகிறார்.

ஜோதிகா நடிப்பில் இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘மொழி’. இப்படத்தை தொடர்ந்து சுமார் பத்து வருடத்திற்கு பின்னர் ஜோதிகா மற்றும் இயக்குநர் ராதா மோகன் கூட்டணி மீண்டும் இந்த ‘காற்றின் மொழி’ படத்தில் இணைகிறது.

இப்படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டு கிளாப் அடித்து படத்தைத் துவக்கி வைத்தார்.

படத்தின் படப்பிடிப்பு  சென்னையில் தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறவுள்ளது. அனைத்து நடிகர்களும் இப்படத்துக்குக்காக நிறைய நாட்கள் கால்ஷீட் வழங்கியுள்ளனர்.  வரும் அக்டோபர் மாதம் இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.