இந்தப் படத்தில் ஹீரோயின்தான் ஹீரோ..!

இந்தப் படத்தில் ஹீரோயின்தான் ஹீரோ..!

போகன் வில்லா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘காத்தம்மா’.

இந்த படத்தில் பிஜு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார். மற்றும் அசோக்ராஜ், சிவாஜி மல்லிகா, கோவை சரளா, அலி, ரவீந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை   –   ஜில்லன்

பாடல்கள்   – பரிதி

கலை   –  மில்டன்

நடனம்    –     ரமேஷ்ரெட்டி

எடிட்டிங்     –   ரேய்மண்ட்

திரைக்கதை, வசனம், ரூபக் – நிஸ்க்

தயாரிப்பு   –  ராய்மலமக்கேல்

ஒளிப்பதிவு செய்து  இயக்குகிறார் பிரபல ஒளிப்பதிவாளர் M.D.சுகுமார். இவர் மலையாளம், தமிழ் உட்பட பல மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…

“நமது பெரும்பாலான படங்களில் பாதிக்கப்பட்ட ஆண்கள் வெகுண்டெழுந்து  தங்களது எதிரிகளை கொள்வதும், பழிவாங்குவதும்தான் இதுவரையிலும் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணான ‘காத்தம்மா’  தன்னுடைய விரோதிகளை எப்படி பழி வாங்குகிறாள் என்பதாக படமாக்கப்பட்டுள்ளது.

இந்த கதைக்காக புதுமுகமான ஹீரோயின் ஆதிரா, பல பயிற்சிகளை எடுத்து தன்னை தயார்படுத்திக்கொண்டார். அதன் பிறகுதான் நடிக்கவே ஆரம்பித்தார். இந்த படத்தின் கதை எல்லோராலும் ரசிக்கும்படியான கமர்ஷியல் கதையாக இருக்கும். கம்பம், தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது..” என்றார்.

Our Score