இளைய தளபதி விஜய் நடித்த ‘நினைத்தேன் வந்தாய்’, ‘பிரியமானவளே’, ‘வசீகரா’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் செல்வபாரதி தற்போது தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘காதலைத் தவிர வேறொன்றுமில்லை’..
யுவன் பெரோஸ்கான் ஹீரோவாகவும், சரண்யா மோகன் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். இமான் அண்ணாச்சி மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். பூபதி ஒளிப்பதிவு செய்ய பாலா எடிட்டிங் செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்திருக்கிறார்.
படம் தயாராகிவிட்டதாம். முதல் காப்பியை பார்த்த அனைவருமே பெரிதும் பாராட்டியிருக்கின்றனர். ‘மெரீனா’, ‘பசங்க’, ‘கோலிசோடா’ போன்று சிறுவர்களை மையப்படுத்தி சிறப்பான முறையில் எடுத்திருப்பதாக இயக்குநர் செல்வபாரதியை பாராட்டியுள்ளனர்.
அடுத்த மாதம் திரைக்கு வர காத்திருக்கிறது ‘காதலைத் தவிர வேறொன்றுமில்லை’..!