full screen background image

‘காதல் பைத்திய’த்தின் கதை இதுதான்..!

‘காதல் பைத்திய’த்தின் கதை இதுதான்..!

அம்மா பிலிம் புரொடக்சன் நிறுவனம் சார்பாக தயாராகும் படத்திற்கு ‘காதல் பைத்தியம்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் ஆதர்ஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் ஏற்கெனவே ஹிந்தியில் ‘ஏ தில் ராம்தா ஜோகி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஜீவிகா நடிக்கிறார். இவர் கன்னடத்தில் ‘பிரம்மா விஷ்ணு மகேஷ்வரா’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். மற்றும் ‘ஆடுகளம்’ நரேன், Y.G.மகேந்திரன், பிரியா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – B.R. ஜெயன்

இசை – எஸ்.பி.வர்மா

பாடல்கள் – விவேகா, சற்குணராஜ்

கலை – எஸ்.தேவராஜ்

நடனம் – கம்பிராஜு – முரளி

ஸ்டண்ட் – மாஸ் மாதா

தயாரிப்பு மேற்பார்வை – சங்கர்

தயாரிப்பு – C.தசரதா

இணைத் தயாரிப்பு – J.C.மிதுன், K.F.பரீத்

கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் – மா சந்துரு.

இவர் ஏற்கெனவே கன்னடத்தில் யோகேஷ், ராகினி திரிவேதி நடித்த ‘பங்காரி’ என்ற படத்தை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்….

ஆதர்ஷ் – ஜீவிகா இருவருக்குமான காதலுக்கு பெற்றவர்களாலோ, மற்றவர்களாலோ எந்தவிதத் தடையோ ஏற்படவில்லை. அதனால் அவர்களுக்குள்ளேயே ஏற்பட்ட ஒரு பிரச்சினையால் சின்ன இடைவெளி ஏற்படுகிறது. அதிலிருந்து அவர்கள் மீண்டு ஒன்று சேர்ந்தார்களா… இல்லையா…? என்பதை சுவையான திரைக்கதையில் சொல்லியிருக்கிறோம். இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி மதுரை, ஊட்டி, கர்நாடகா, கேரளா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது..” என்றார் இயக்குநர் மா.சந்துரு.

Our Score