‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உட்பட பல படங்களை செங்கல்பட்டு மாவட்டத்தில் விநியோகம் செய்திருக்கும் மதிமீடியா எண்டர்டைனர்ஸ் பட நிறுவனம் சார்பாக சஞ்சித் சிவா தயாரிக்கும் படத்திற்கு ‘காதல் முன்னேற்றக் கழகம்’ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் கதாநாயகனாக விவந்த் நடிக்கிறார்.இவர் ஏற்கெனவே ‘இருக்கு; ஆனா இல்லை’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக சோனி செறிஸ்டா நடிக்கிறார். இவரும் ஏற்கெனவே ‘இஞ்சி மரப்பா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். முக்கிய வேடத்தில் ரோபோ சங்கர் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் அனைவரும் புதுமுகங்களே.
ஒளிப்பதிவு – வினோத்
இசை – பாசில்
எடிட்டிங் – தினா
கலை – பூபதி
பாடல்கள் – யுகபாரதி
ஸ்டன்ட் – டான் அசோக்
நடனம் – ராஜேஷ் கண்ணா, சந்தோஷ்
தயாரிப்பு மேற்பார்வை – A.P.ரவி
தயாரிப்பு – சஞ்சித்சிவா
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரஜய் சிவநேசன்.
இவர் சூப்பர் குட் பிலிம்ஸ், டூயட் மூவீஸ், எஸ்.பி.பி.சரண் தயாரித்த பல படங்களில் உதவியாளராக பணியாற்றியவர்.
“ரொமான்டிக் காதல் திரில்லர் படமாக உருவாகிறது இந்தக் ‘காதல் முன்னேற்றக் கழகம்’. மே மாதம் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி 30 நாட்கள் நடைபெற உள்ளது..” என்றார் இயக்குனர் ரஜய் சிவநேசன்.