ஒரே தலைப்பில் இரண்டு திரைப்படங்கள் – புதிய சர்ச்சை

ஒரே தலைப்பில் இரண்டு திரைப்படங்கள் – புதிய சர்ச்சை

ஒரே பெயரில் இரண்டு திரைப்படங்கள் உருவாகி சர்ச்சைகளை உருவாக்குவது தமிழ்த் திரையுலகில் புதிதல்ல. ஏற்கெனவே, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, ‘க.க.போ.போ.’ ஆகிய படங்களின் தயாரிப்பின்போது இதே பெயரில் இன்னொரு படமும் வெளியாகி பிரச்சினைகள் உருவாகின.

இப்போது இந்த லிஸ்ட்டில் புதிய திரைப்படம் ஒன்றும் சிக்கியுள்ளது.

நத்தம் மாரியம்மன் மூவீஸ் கோபிநாத், ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், ஷாலினி புரொடக்சன் ஆனந்த் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்.’ இதில் நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜனும், சாந்தினி தமிழரசனும் ஜோடியாக நடிக்கிறார்கள். மாணிக் சத்யா இயக்கியிருக்கிறார்.

Vivanth-3 sony-charishta-1

ஆனால் இதே ‘காதல் முன்னேற்றக் கழகம்’ என்கிற பெயரில் 2014-ம் ஆண்டு ஒரு படம் தயாரானது. அந்தப் படத்தை ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உட்பட பல படங்களை செங்கல்பட்டு மாவட்டத்தில் விநியோகம் செய்த மதிமீடியா எண்டர்டெயினர்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் சஞ்சித் சிவா தயாரித்திருந்தார்.

அந்தப் படத்தில் ‘இருக்கு; ஆனா இல்லை’ படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த விவாந்த் ஹீரோவாகவும், சோனி சிரிஸ்டா ஹீரோயினாகவும் நடித்திருந்தார்கள். எஸ்.பி.பி.சரணிடம் உதவியாளராக இருந்த ரஜய் சிவநேசன் எழுதி, இயக்கியிருந்தார்.

இந்தப் படம் ஏனோ இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள்ளாக அதே பெயரில் இப்போது புதிதாக மாணிக் சத்யா இயக்கியிருக்கும் புதிய 'காதல் முன்னேற்றக் கழகம்' படம் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.