நத்தம் மாரியம்மன் மூவீஸ் கோபிநாத், ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், ஷாலினி புரொடக்சன் ஆனந்த் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்.’
இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர் ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – ஹாரிஸ் கிருஷ்ணன், இசை – பி.சி.சிவன், தயாரிப்பு – கோபிநாத், மலர்க்கொடி முருகன், ஆனந்த், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மாணிக் சத்யா,
படம் பற்றி இயக்குநர் மாணிக் சத்யா பேசும்போது, “இந்தப் படம் 1980-களில் நடக்கின்ற கதை. படப்பிடிப்பு சென்னை, ஊட்டி, கடலூர் மாவட்டம், திட்டக்குடி, விருத்தாசலம், பெரம்பலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது..” என்றார்.









